என் மலர்tooltip icon

    தேனி

    • தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றார்.

    தங்க தமிழ்ச்செல்வத்தின் மகள் டாக்டர் சாந்திக்கும், சுப்பிரமணியனுக்கும் வருகிற 20-ந்தேதி திருமணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருமண அழைப்பிதழை வழங்க தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றார். அவரை ஓ.பன்னீர்செல்வம் இன்முகத்துடன் வரவேற்றார்.

    தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார். அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் மகள் திருமணத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு தங்க தமிழ்ச்செல்வன் சென்றது இரு கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போடியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவர் பி.எஸ்.சி. சிற்பக் கலை படித்து வருகிறார்.
    • பிரேம்குமாருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    நாட்டின் 76-வது சுதந்திரதின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் போடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரேம்குமார் என்பவர் சாக்பீசில் தேசிய கொடியை சுமந்த இளைஞரின் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

    தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவர் பி.எஸ்.சி. சிற்பக் கலை படித்து வருகிறார். இவர் சாக்பீசில் ஒரு செ.மீ அகலம், 3.5 செ.மீ உயரத்திலும், 2 மி.மீ உயரம், 9 மி.மீ அகலத்திலும் இளைஞர் ஒருவர் தன் கைகளில் தேசிய கொடியை தலைக்கு மேல் ஏந்தியபடி நடப்பது போன்ற உருவத்தை வடிவமைத்துள்ளார்.

    இதனை சிற்பமாக செதுக்க 45 நிமிடங்கள் ஆனதாக அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இதனை பதிவிட்டுள்ளார். பிரேம்குமாருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து மாணவர் பிரேம்குமார் தெரிவிக்கையில், வருங்கால இந்தியா இளைஞர் கைகளில்தான் உள்ளது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பத்தை வடித்துள்ளேன். 77-வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் மக்கள் கொண்டாட தயாராகி வரும் நிலையில் நாட்டு மக்களுக்காக இதனை சமர்பித்துள்ளேன் என்றார்.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர்.
    • உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவர்கள் வெ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடிகள் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினர். காந்தி நகர் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்று அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சமாதானம் அடைந்த பெண்ணின் பெற்றோர் உடலை வாங்கிச் சென்றனர். ஆனால் மாரிமுத்துவின் உறவினர்கள் உடலை வாங்கவில்லை. மாரிமுத்துவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று இந்திய ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் பெரியகுளம் அருகே காந்திநகர் கும்பக்கரை பிரிவு பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர். மேலும் கொடிகளை கட்டியதாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக மாரிமுத்துவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • கல்லூரி மாணவர்களுக்கு போதை அற்ற தமிழகம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர்.
    • கல்லூரி மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் ஆன்டி நர்கோடிக்ஸ் செல் ஆகியவை தேனி ஆல் தி சில்ரன் அறக்கட்டளையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை அற்ற தமிழகம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர். ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ராஜேஷ் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு முன்னிலை வகித்து உரையாற்றினார்.

    தேனி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சப்-இன்ஸ்ெபக்டர் நாகேந்திரன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் போதை அற்ற தமிழகத்தினை உருவாக்குவதில் கல்லூரி மாணவர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினர். உளவியல் ஆலோசகர் பழனிச்சாமி போதைப் பழக்கம் ஓர் மனநோய் என்பது குறித்து உரையாற்றினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்த், ரெட் ரிப்பன் கிளப்பின் பொறுப்பாளர் டேவிட் பூண், ஆண்டி நர்கோடிக்ஸ் செல் பொறுப்பாளர் சந்திரமோகன் செய்திருந்தனர். கல்லூரி மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். ஆல் தி சில்ரன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.
    • இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் சுமார் 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.

    இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    மலை அடிவாரத்தில் கழிப்பறை அமைக்க ப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் அங்கு செல்ல பெண்கள் அச்சமடைந்து வருகின்ற னர். எனவே ஊருக்குள் நவீன கழிப்பறை கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • இந்த ஆண்டு நீர்மட்டம் உயராமல் இருந்ததால் பாசனத்துக்கு தற்போது வரை தண்ணீர் திறக்கப்பட வில்லை.
    • இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கும் நீர்வரத்து ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு நீர்மட்டம் உயராமல் இருந்ததால் பாசனத்துக்கு தற்போது வரை தண்ணீர் திறக்கப்பட வில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கும் நீர்வரத்து ஏற்பட்டது.

    ஆனால் மழை தொடராமல் ஏமாற்றி சென்றது. இதனால் நீர்வரத்து 54 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 48.10 அடியாக உள்ளது. நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.50 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 71.43 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறையில் மட்டும் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஆண்டி பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • இந்த நிலையில்பொது இடத்தில் வைத்து புகார் கொடுத்தவரை தாக்கி காயப்படுத்தியதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலுத்தாய் மீது புகார் அளித்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது53). இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த வேலுத்தாய் என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில்பிரச்சினை ஏற்பட்டது. மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஆண்டி பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். மேலும் வழக்கு தொடர்ந்ததால் அவர் மீது வேலுத்தாய் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில்பொது இடத்தில் வைத்து பாண்டியராஜனை தாக்கி காயப்படுத்தியதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலுத்தாய் மீது புகார் அளித்தார்.

    இது குறித்து விசாரிக்க எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காயம் அடைந்த பாண்டியராஜன் ஆண்டிப ட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    • இளம்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக பக்கத்து வீட்டில் கூறி சாவியை கொடுத்து சென்றார்.
    • இளம்பெண் பெற்றோர் வீட்டிற்கு வரவில்ைல என தெரிய வந்ததும், அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அழகர்சாமிபுரத்ைத சேர்ந்தவர் வசந்த் மனைவி ஜோதிகா (வயது20). இவர்கள் காதலித்து கடந்த 2020ம் ஆண்டு இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். வசந்த் பெயிண்ட்டிங் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் ஜோதிகா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக பக்கத்து வீட்டில் கூறி சாவியை கொடுத்து சென்றார். இது குறித்து அறிந்ததும் வசந்த் தனது மாமியார் வீட்டுக்கு போன் செய்தார்.

    அப்போது ஜோதிகா அங்கு வரவில்ைல என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • வடுகபட்டியில் உள்ள பூண்டு கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • ப்போது மற்றொரு வைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கணேசனின் பைக் சீட்டின் அடியில் இருந்த ரூ.85 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது36). பூண்டு வியாபாரி. சம்பவத்தன்று வங்கியில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். வடுகபட்டியில் உள்ள பூண்டு கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு வைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கணேசனின் பைக் சீட்டின் அடியில் இருந்த ரூ.85 ஆயிரத்தை திருடிச் சென்றனர். கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் அவர்கள் உருவம் பதிவாகி இருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரிதிவிராஜன் (32). இவர் தனது மோட்டார் சைக்கிளை தேனி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கடை முன்பு நிறுத்தி இருந்தார். அந்த பைக்கை ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் திருடிச் செல்ல முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    • இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • போட்டித் தேர்வர்கள் இந்த அலுவலகத்தின் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023ம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 6553 காலி ப்பணி யிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3587 காலி ப்பணியிடங் களுக்கான போட்டித் தேர்வு நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது.

    இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.

    இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் இந்த அலுவலகத்தின் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • தேனி செல்லும் பிரதான சாலையில் தனியார் ஏ.டி.எம் எந்திரத்தை தனிநபர் ஒருவர் தேங்காய் உரிக்கும் இரும்பு கம்பியால் உடைத்துக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடமலைக்குண்டு ரங்கநாதபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் தேனி செல்லும் பிரதான சாலையில் தனியார் ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள எந்திரத்தை தனிநபர் ஒருவர் தேங்காய் உரிக்கும் இரும்பு கம்பியால் உடைத்துக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடமலைக்குண்டு ரங்கநாதபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜீவ் மகன் பாண்டியனை (52) பிடித்து விசாரணை செய்தனர். அவர் தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்று வருகிறார்.

    ஆனால் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே காந்திநகரை சேர்ந்தவர் குமார்(48). தகரசெட் அமைக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×