என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தேனியில் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி
- இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
- போட்டித் தேர்வர்கள் இந்த அலுவலகத்தின் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023ம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 6553 காலி ப்பணி யிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3587 காலி ப்பணியிடங் களுக்கான போட்டித் தேர்வு நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது.
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் இந்த அலுவலகத்தின் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.