என் மலர்
நீங்கள் தேடியது "problem in the water level"
- இந்த ஆண்டு நீர்மட்டம் உயராமல் இருந்ததால் பாசனத்துக்கு தற்போது வரை தண்ணீர் திறக்கப்பட வில்லை.
- இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கும் நீர்வரத்து ஏற்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு நீர்மட்டம் உயராமல் இருந்ததால் பாசனத்துக்கு தற்போது வரை தண்ணீர் திறக்கப்பட வில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கும் நீர்வரத்து ஏற்பட்டது.
ஆனால் மழை தொடராமல் ஏமாற்றி சென்றது. இதனால் நீர்வரத்து 54 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 48.10 அடியாக உள்ளது. நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.50 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 71.43 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறையில் மட்டும் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






