என் மலர்tooltip icon

    தேனி

    • வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஆண்டி பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • இந்த நிலையில்பொது இடத்தில் வைத்து புகார் கொடுத்தவரை தாக்கி காயப்படுத்தியதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலுத்தாய் மீது புகார் அளித்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது53). இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த வேலுத்தாய் என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில்பிரச்சினை ஏற்பட்டது. மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஆண்டி பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். மேலும் வழக்கு தொடர்ந்ததால் அவர் மீது வேலுத்தாய் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில்பொது இடத்தில் வைத்து பாண்டியராஜனை தாக்கி காயப்படுத்தியதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலுத்தாய் மீது புகார் அளித்தார்.

    இது குறித்து விசாரிக்க எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காயம் அடைந்த பாண்டியராஜன் ஆண்டிப ட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    • இளம்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக பக்கத்து வீட்டில் கூறி சாவியை கொடுத்து சென்றார்.
    • இளம்பெண் பெற்றோர் வீட்டிற்கு வரவில்ைல என தெரிய வந்ததும், அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அழகர்சாமிபுரத்ைத சேர்ந்தவர் வசந்த் மனைவி ஜோதிகா (வயது20). இவர்கள் காதலித்து கடந்த 2020ம் ஆண்டு இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். வசந்த் பெயிண்ட்டிங் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் ஜோதிகா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக பக்கத்து வீட்டில் கூறி சாவியை கொடுத்து சென்றார். இது குறித்து அறிந்ததும் வசந்த் தனது மாமியார் வீட்டுக்கு போன் செய்தார்.

    அப்போது ஜோதிகா அங்கு வரவில்ைல என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • வடுகபட்டியில் உள்ள பூண்டு கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • ப்போது மற்றொரு வைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கணேசனின் பைக் சீட்டின் அடியில் இருந்த ரூ.85 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது36). பூண்டு வியாபாரி. சம்பவத்தன்று வங்கியில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். வடுகபட்டியில் உள்ள பூண்டு கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு வைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கணேசனின் பைக் சீட்டின் அடியில் இருந்த ரூ.85 ஆயிரத்தை திருடிச் சென்றனர். கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் அவர்கள் உருவம் பதிவாகி இருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரிதிவிராஜன் (32). இவர் தனது மோட்டார் சைக்கிளை தேனி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கடை முன்பு நிறுத்தி இருந்தார். அந்த பைக்கை ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் திருடிச் செல்ல முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    • இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • போட்டித் தேர்வர்கள் இந்த அலுவலகத்தின் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023ம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 6553 காலி ப்பணி யிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3587 காலி ப்பணியிடங் களுக்கான போட்டித் தேர்வு நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது.

    இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.

    இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் இந்த அலுவலகத்தின் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • தேனி செல்லும் பிரதான சாலையில் தனியார் ஏ.டி.எம் எந்திரத்தை தனிநபர் ஒருவர் தேங்காய் உரிக்கும் இரும்பு கம்பியால் உடைத்துக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடமலைக்குண்டு ரங்கநாதபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் தேனி செல்லும் பிரதான சாலையில் தனியார் ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள எந்திரத்தை தனிநபர் ஒருவர் தேங்காய் உரிக்கும் இரும்பு கம்பியால் உடைத்துக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடமலைக்குண்டு ரங்கநாதபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜீவ் மகன் பாண்டியனை (52) பிடித்து விசாரணை செய்தனர். அவர் தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்று வருகிறார்.

    ஆனால் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே காந்திநகரை சேர்ந்தவர் குமார்(48). தகரசெட் அமைக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சிறுகுறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மன்றத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைசெலுத்தி உழவு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

    சின்னமனூர்:

    சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சிக்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்துவிடவும் ரூ.9.75 லட்சம் மதிப்புள்ள புதிய டிராக்டரை வழங்கினார். சிறுகுறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மன்றத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைசெலுத்தி உழவு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதே போல ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அப்பள்ளியில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க சென்ற மாணவி சிவசக்திக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ அறிவித்தார்.

    இதில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பெருந்தலைவர் நிவேதா அண்ணாதுரை, காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து, தேனி மாவட்ட விவசாய தொழிலாளர்அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் பல நிர்வாகிகளும், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேனி மாவட்டத்தில் செல்போன் தொலைந்ததாக கிடைத்த புகாரின் படி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மீட்கப்பட்ட சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள 156 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் செல்போன் தொலைந்ததாக கிடைத்த புகாரின் படி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மீட்கப்பட்ட சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள 156 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., அபிநவ்குமார் மற்றும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். கடந்த 7 மாதத்தில் மட்டும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசாரால் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 668 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடி யாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • திறந்தவெளி கிணறு கள். கட்டுமான குழிகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி குழிகளுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள். திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவற்றின் இருப்பிடங்களின் பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்க ளின் விரிவான பதிவைப் பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் கட்ட ப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கிணறுகள், உடனடியாக மூடப்பட வேண்டும். கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடி யாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திறந்தவெளி கிணறு கள். கட்டுமான குழிகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி குழிகளுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.

    மேலும், சாலையோர ங்களில் உள்ள கால்வாய்க ளில், சாலை பயன்பாட்டா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சாலையோரங்களில் கட்டுமானப் பணிக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் கால்வாய்களின் இருப்பை அறிவுறுத்தும் பொருட்டு ஒட்டுனர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.

    இந்த பாதுகாப்பு நட வடிக்கைகளை செயல்படு த்துவதற்கு மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளாட்சி அமைப்பு களுடன் இணைந்து பணிகளை விரைந்து செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்து ள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைத்து அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பணிகள் நிறுத்த போராட்டம் நடை பெறும் என ஒன்றிய ஆணை யருக்கு மனு அளிக்கப்பட்டது.
    • ஒப்பந்ததாரர்க ளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கிராமங்களில் அரசு ஒப்பந்த பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் சாக்கடை வடிகால், சிமெண்டுரோடு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்த பணிகள் அனைத்தும் வருடத்திற்கு ஒருமுறை அதிகாரிகளால் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு பின்னர் ஒன்றிய நிர்வாகம் மூலம் நிலுவையில் உள்ள வைப்பு தொகை ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வருடம் ஏராளமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் முறையாக கணக்கு தணிக்கை செய்த பின்பும் ஒப்பந்ததாரர்க ளுக்கு வைப்பு தொகை வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வைப்புத் தொகையை வழங்க சில அதிகாரிகள் குறிப்பிட்ட சதவீதம் அடிப்படையில் கமிஷன் தொகை கேட்க ப்படுவதாகவும் ஒப்பந்ததார ர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஒப்பந்த தாரர்கள் பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி யும் வைப்புத்தொகை வழங்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைத்து அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பணிகள் நிறுத்த போராட்டம் நடை பெறும் என ஒன்றிய ஆணை யருக்கு மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படா ததை தொடர்ந்து ஒப்பந்த தாரர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் நிலுவையில் உள்ள வைப்புத் தொகையை விரைந்து வழங்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை அச்சிட்டு அதனை ஒன்றிய அலுவலக சுவர்களில் ஒட்டினர்.

    மேலும் தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் அலுவல கங்களுக்கு சென்று வைப்புத் தொகையை வழங்க கோரி மனு அளித்தனர். ஒப்பந்ததாரர்க ளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கிராமங்களில் அரசு ஒப்பந்த பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டது. கிராமங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, நூலகம் ஆகிய இடங்களில் வேம்பு, கொய்யா, நாவல், புங்கம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற செயலர் செய்திருந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், துணைத் தலைவர் பிரியா தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஆணையர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கடமலைக்குண்டுவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, நூலகம் ஆகிய இடங்களில் வேம்பு, கொய்யா, நாவல், புங்கம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற செயலர் சின்னச்சாமி செய்திருந்தார்.

    • குள்ளப்புரம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள் செயல்பட்டு வருகிறது.
    • குள்ளப்புரம் கிராம மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியாகும் தூசியால் குள்ளப்புரம் கிராம மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வந்தனர்.

    குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி, வெண்டை, கத்தரி, வாழை, தென்னை உள்ளிட்ட நிலங்களும் பாதிப்படைந்து வந்தன. வீடுகளுக்குள் தூசி படர்ந்து காணப்பட்டதுடன் உணவு, குடிநீரிலும் நச்சு கலக்கும் நிலை உருவானது.

    இரவு பகல் பாராமல் 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் செல்வதால் தூக்கமின்றி தவித்து வந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

    எனவே குள்ளப்புரம் கிராம மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரி மற்றும் கிரசர்களை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×