என் மலர்
நீங்கள் தேடியது "smuggling truck"
- டிப்பர் லாரியை மறித்து ஆய்வு செய்த போது எம் -சாண்ட் மணல் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
- டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதிகாரிகள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுமதி சீட்டு இல்லாமல் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாக தேனிமாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கம்பம்மெட்டு சோதனை சாவடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பாண்டியராஜன் போலீசாருடன் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் உள்ள அனுமதி சீட்டுகளை ஆய்வு செய்தார்.
அப்போது டிப்பர் லாரியை மறித்து ஆய்வு செய்த போது எம் -சாண்ட் மணல் இருந்துள்ளது. இதற்கான அனுமதி சீட்டினை லாரி டிரைவரிடம் கேட்டபோது டிரைவர் அனுமதி சீட்டு இல்லையென கூறிவிட்டு தப்பியோடிவிட்டார். டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதிகாரிகள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து உதவி புவியியலாளர் பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.






