என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breakage in joint drinking water pipe"

    • தொடர்ந்து குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி ஓடை வழியாக ஆற்றில் கலந்து வருகிறது.
    • தொடர்ந்து நீர் வெளி யேறி வருவதன் காரண த்தால் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலை- மயிலை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி க்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு துரைச்சாமிபுரம் அருகே கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    இது தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால் தொடர்ந்து குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி ஓடை வழியாக ஆற்றில் கலந்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் குழாய் உடைப்பை சீரமைக்க எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    தொடர்ந்து நீர் வெளி யேறி வருவதன் காரண த்தால் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வைகை ஆறு வறண்டதால் உறை கிணறு களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்த நிலை நீடித்தால் விரைவில் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீர் பிடிக்க பொதுமக்கள் வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே கூட்டுக் குடிநீர் திட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாய் அடைப்பை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×