என் மலர்tooltip icon

    தேனி

    • தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உப்பு க்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த பால்கரு ப்பையா மகள் பால்பாக்கி யம் (வயது 15). இவர் அங்குள்ள பச்சையப்பா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் முத்து வீரி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் பாலக்கோம்பை கென்னடி நகரைச் சேர்ந்த கருப்பையா மகள் கீர்த்தனா (19). இவர் வீரபாண்டியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் சந்திரசேகர் (19). இவர் டிரம்ஸ் செட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று டிரம்ஸ் செட் அடிக்கும் பணிக்காக வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோனை கருப்புசாமி கோவிலில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சார்பில் 43 ஆடுகள், 26 சேவல்கள் கோவிலில் பலியிடப்பட்டன.
    • கோவிலின் ஜன்னல்கள், கதவு உள்ளிட்டவற்றை அடைத்த அவர் கோவில் சுவற்றில் சுவாமிக்கு அருகில் உள்ள பெரிய துவாரம் வழியாக அனைத்து மதுபாட்டில்களையும் உடைத்து ஊற்றினார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திரு க்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 22-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சனீஸ்வர பகவானுக்கும் , நீலாதேவி க்கும் திருக்கல்யாணம் கடந்த 4ந் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சக்திகரகம் எடுத்தல், சந்தனகாப்பு, சாத்துபடி, சுவாமி புறப்பாடு, முளைப்பாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று இரவு இங்குள்ள சோனை கருப்பசாமிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சார்பில் 43 ஆடுகள், 26 சேவல்கள் கோவிலில் பலியிடப்பட்டன. மேலும் ஏராளமானோர் மதுபாட்டில்கள், சுருட்டுகளை சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர்.

    அதன்பின் வாயில் துணி கட்டிய பூசாரி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். கோவிலின் ஜன்னல்கள், கதவு உள்ளிட்டவற்றை அடைத்த அவர் கோவில் சுவற்றில் சுவாமிக்கு அருகில் உள்ள பெரிய துவாரம் வழியாக அனைத்து மதுபாட்டில்களையும் உடைத்து ஊற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பலியிட்ட ஆடு, சேவல்களை சமைத்து கறி விருந்து சாப்பிட்டனர்.

    இதன்பின்னர் வருகிற 19ந் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி இறக்கத்துடன் ஆடிப்பெரு ந்திருவிழா நிறைவு பெறுகிறது.

    • நோய் கொடுமையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் 25-வது வார்டு நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 45). இவருக்கு கடந்த சில வாரங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று மனமுடைந்த நிலையில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கணேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தொடர்ந்து குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி ஓடை வழியாக ஆற்றில் கலந்து வருகிறது.
    • தொடர்ந்து நீர் வெளி யேறி வருவதன் காரண த்தால் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலை- மயிலை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி க்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு துரைச்சாமிபுரம் அருகே கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    இது தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால் தொடர்ந்து குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி ஓடை வழியாக ஆற்றில் கலந்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் குழாய் உடைப்பை சீரமைக்க எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    தொடர்ந்து நீர் வெளி யேறி வருவதன் காரண த்தால் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வைகை ஆறு வறண்டதால் உறை கிணறு களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்த நிலை நீடித்தால் விரைவில் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீர் பிடிக்க பொதுமக்கள் வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே கூட்டுக் குடிநீர் திட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாய் அடைப்பை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 4 நில ஆர்ஜித வழக்குகளும், 10 மோட்டார் வாகன வழக்குகளும், 5 வங்கி தொடர்பான வழக்கு களும் என மொத்தம் 19 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • மொத்தம் ரூ.3,37,15,158-க்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.

    தேனி:

    2023-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணை யக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேனி மாவட்ட முதன்மை நீதியரசர் சஞ்சய்பாபா தலைமையிலும் சிறப்பு மக்கள் நீதிமன்ற சார்பு நீதியரசர் சுந்தரி முன்னிலை யில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 4 நில ஆர்ஜித வழக்குகளும், 10 மோட்டார் வாகன வழக்குகளும், 5 வங்கி தொடர்பான வழக்கு களும் என மொத்தம் 19 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மொ த்தம் ரூ.3,37,15,158-க்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.

    இதில் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணையக்குழு வக்கீல் கருணாநிதி மற்றும் பிற வக்கீல்கள், சட்ட ப்ப ணிகள் ஆணையக்குழு அலுவல ர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவிலில் 1008 விளக்கு பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட ருத்ராட்சம் வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் அருகே தாமரைக்குளம் சாலையில் 100 ஆண்டு பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்ப ட்டது. கூடலூர், கம்பம், பாளையம் உள்ளடக்கிய பகுதியை ஆண்ட கேரள மாநில பூஞ்சாற்று அரச வம்சத்தை சேர்ந்த பூஞ்சாற்று தம்பிரான் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக கூற படுகிறது. காலப்போ க்கில் இக்கோ வில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது சேதம் அடைந்த இக்கோவிலில் பக்தர்கள் வாரந்தோறும் சென்று வழிபட்டு வருகின்றனர்.பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவிலில் 1008 விளக்கு பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முன்னதாக கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ஒருங்கி ணைந்த 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் தேவர் தலைமையில், இந்து முன்னணி நகர பொது ச்செயலாளர் ஜெகன், நகர செயலாளர் அருண், நகர துணைத்தலைவர் ஸ்டீபன் ராஜ் மற்றும் விவசாயிகள் ,இந்து முன்னணி நிர்வாகிகள் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து சொற்பொழிவு, அன்னதான நிகழ்ச்சியை விவசாய சங்க தலைவர் தேவர் தொடங்கிவைத்தார்.

    விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட ருத்ராட்சம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் வார வழிபாட்டு குழு, தர்ம விழிப்புணர்வு இயக்கத்தினர் செய்து இருந்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லாவண்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றார்.

    தங்க தமிழ்ச்செல்வத்தின் மகள் டாக்டர் சாந்திக்கும், சுப்பிரமணியனுக்கும் வருகிற 20-ந்தேதி திருமணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருமண அழைப்பிதழை வழங்க தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றார். அவரை ஓ.பன்னீர்செல்வம் இன்முகத்துடன் வரவேற்றார்.

    தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார். அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் மகள் திருமணத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு தங்க தமிழ்ச்செல்வன் சென்றது இரு கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போடியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவர் பி.எஸ்.சி. சிற்பக் கலை படித்து வருகிறார்.
    • பிரேம்குமாருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    நாட்டின் 76-வது சுதந்திரதின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் போடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரேம்குமார் என்பவர் சாக்பீசில் தேசிய கொடியை சுமந்த இளைஞரின் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

    தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவர் பி.எஸ்.சி. சிற்பக் கலை படித்து வருகிறார். இவர் சாக்பீசில் ஒரு செ.மீ அகலம், 3.5 செ.மீ உயரத்திலும், 2 மி.மீ உயரம், 9 மி.மீ அகலத்திலும் இளைஞர் ஒருவர் தன் கைகளில் தேசிய கொடியை தலைக்கு மேல் ஏந்தியபடி நடப்பது போன்ற உருவத்தை வடிவமைத்துள்ளார்.

    இதனை சிற்பமாக செதுக்க 45 நிமிடங்கள் ஆனதாக அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இதனை பதிவிட்டுள்ளார். பிரேம்குமாருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து மாணவர் பிரேம்குமார் தெரிவிக்கையில், வருங்கால இந்தியா இளைஞர் கைகளில்தான் உள்ளது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பத்தை வடித்துள்ளேன். 77-வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் மக்கள் கொண்டாட தயாராகி வரும் நிலையில் நாட்டு மக்களுக்காக இதனை சமர்பித்துள்ளேன் என்றார்.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர்.
    • உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவர்கள் வெ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடிகள் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினர். காந்தி நகர் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்று அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சமாதானம் அடைந்த பெண்ணின் பெற்றோர் உடலை வாங்கிச் சென்றனர். ஆனால் மாரிமுத்துவின் உறவினர்கள் உடலை வாங்கவில்லை. மாரிமுத்துவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று இந்திய ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் பெரியகுளம் அருகே காந்திநகர் கும்பக்கரை பிரிவு பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர். மேலும் கொடிகளை கட்டியதாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக மாரிமுத்துவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • கல்லூரி மாணவர்களுக்கு போதை அற்ற தமிழகம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர்.
    • கல்லூரி மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் ஆன்டி நர்கோடிக்ஸ் செல் ஆகியவை தேனி ஆல் தி சில்ரன் அறக்கட்டளையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை அற்ற தமிழகம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர். ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ராஜேஷ் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு முன்னிலை வகித்து உரையாற்றினார்.

    தேனி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சப்-இன்ஸ்ெபக்டர் நாகேந்திரன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் போதை அற்ற தமிழகத்தினை உருவாக்குவதில் கல்லூரி மாணவர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினர். உளவியல் ஆலோசகர் பழனிச்சாமி போதைப் பழக்கம் ஓர் மனநோய் என்பது குறித்து உரையாற்றினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்த், ரெட் ரிப்பன் கிளப்பின் பொறுப்பாளர் டேவிட் பூண், ஆண்டி நர்கோடிக்ஸ் செல் பொறுப்பாளர் சந்திரமோகன் செய்திருந்தனர். கல்லூரி மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். ஆல் தி சில்ரன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.
    • இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் சுமார் 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.

    இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    மலை அடிவாரத்தில் கழிப்பறை அமைக்க ப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் அங்கு செல்ல பெண்கள் அச்சமடைந்து வருகின்ற னர். எனவே ஊருக்குள் நவீன கழிப்பறை கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • இந்த ஆண்டு நீர்மட்டம் உயராமல் இருந்ததால் பாசனத்துக்கு தற்போது வரை தண்ணீர் திறக்கப்பட வில்லை.
    • இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கும் நீர்வரத்து ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு நீர்மட்டம் உயராமல் இருந்ததால் பாசனத்துக்கு தற்போது வரை தண்ணீர் திறக்கப்பட வில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கும் நீர்வரத்து ஏற்பட்டது.

    ஆனால் மழை தொடராமல் ஏமாற்றி சென்றது. இதனால் நீர்வரத்து 54 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 48.10 அடியாக உள்ளது. நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.50 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 71.43 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறையில் மட்டும் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×