என் மலர்tooltip icon

    தேனி

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகா லையில் இருந்தே ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்தனர்.
    • சுருளிதீர்த்தம் பண்டார துறையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவருக்கு சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்து ள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. இங்கு கைலாசநாதர் குகை, பூத நாரயணன் கோவில், ஆதி ,அய்யப்பன் கோவில், கன்னிமார் கோவ்இல் ஆகியவை உள்ளன. இத னால் ஏராளமான சுற்று லாப் பயணிகளும், பக்தர்க ளும் சுருளி அருவியில் குளித்துவிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

    , ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகா சிவராத்திரி நாட்களில் காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக சுருளி அருவி பகுதியில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) மற்றும் ஆத்ம சாந்தி வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்ற னர். நேற்று ஆடி அமாவா சையை முன்னிட்டு அதிகா லையில் இருந்தே ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்தனர்.

    அருவியில் நீராடிய பின்னர் அருகே உள்ள சுருளி அருவி ஆற்றில் தங்களது முன்னோர்கள் ஆத்ம சாந்தி வழிபாடுகள் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து கோவில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்து, அன்னதானம், வஸ்த்திர தானம் செய்தனர். பின் புனித நீரினை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த உத்தமபாளை யம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி உத்தரவில் கம்பம் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் ஏராளமான போலீசாரும், கம்பம் கிழக்கு வனசரகர் பிச்சை மணி தலைமையில் வனத்துறை யினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சுருளிதீர்த்தம் பண்டார துறையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவி லில் உள்ள மூலவருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட 18 வகை யான அபிஷேகங்கள் நடை பெற்றது. பூசாரி முருகன் சிறப்பு வேள்வி யாகத் துடன் பூஜை செய்தார்.

    ஆதி அண்ணாமலையார் பக்தர்க ளுக்கு வில்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் காலை முதல் மாலைவரை அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த சுருளி பட்டியில் இருந்து சுருளி அருவிக்கு செல்ல ஒரு வழி பாதை அமல் படுத்தப்பட்டிருந்தது.

    • மத்திய குழுவினர் பெரி யாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.
    • மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழு வினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக வும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    பருவநிலை மாறுபாடு களின் போது முல்லைப்பெரி யாறு அணையின் உறுதி தன்மை பராமரிப்பு பணி கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மத்திய தலைமை கண்காணிப்பு க்குழு அமைத்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

    இந்த குழுவுக்கு உதவியாக துணை மத்திய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த 2 குழுக்களும் உச்சநீதிமன்ற த்தில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பார்கள். அத ன்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர். ஆனால் மத்திய குழுவினர் பெரி யாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.

    இந்த நிலையில் இன்று தலைவர் சதீஸ்குமார் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் அணையின் செயற்பொறி யாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பணை நீர் பாசன த்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி செயற்பொறியாளர் அருண் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர். இந்தக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் மற்றும் தண்ணீர் கசிவு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும் மதகுகளையும் இயக்கிப்பார்த்து நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து சோதனையிட்டனர். பின்னர் மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணை க்குழு வினர் ஆலோசனை நடத்துகின்றனர். இதன் அறிக்கைகள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • சிறுமியை ஏமாற்றி கற்பழித்த வெல்டிங் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் படித்து வந்தார். சிறுமியின் பெற்றோர் தனியார் மில்லில் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறுமி தெரிவிக்கையில், எனது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற சமயத்தில் எனது பெரியப்பா மகனான 27 வயது சகோதரர் என்னுடன் நெருக்கமாக பழகினார். பின்னர் பலமுறை பலாத்காரம் செய்தார். இதனால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறவேண்டாம் எனவும் மிரட்டி வந்தார் என தெரிவித்தார். இதனிடையே சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது.

    தேனி அனைத்து மகளிர் போலீசார் தங்கை உறவுமுறை கொண்ட சிறுமியை ஏமாற்றி கற்பழித்த வெல்டிங் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலப்பிரச்சினை காரணமாக வாலிபர் எலுமிச்சை மற்றும் தென்னை மரங்களுக்கு தீ வைத்தார்.
    • புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தை சேர்ந்தவர் மனோஜ் (வயது34). இவருக்கு ஆனை மலையான்பட்டி பாலோடை அருகே தோட்டம் உள்ளது. இங்கு தென்னை, எலுமிச்சை விவ சாயம் செய்து வருகின்றார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த கண்ணன் (34) என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரண மாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இங்கு புகுந்த ஆனந்த கண்ணன் தென்னை, எலுமிச்சை மரங்களை சேதப்படுத்தி தீ வைத்தார்.

    இது குறித்து ராயப்ப பன்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    ராாயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜஸ்டின்பிர பாகர். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் சவரிமுத்து என்பவரின் கட்டிட வேலை பார்த்து அதற்கான முழு பணத்ைத பின்னர் தருவதாக கூறி இருந்தார். ஆனால் பணம் தராமல் காலம் தாழ்த்திய தால் சவரிமுத்துவிடம் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சவரிமுத்து, அவரது மனைவி பாப்பா உள்பட 5 பேர் ஜஸ்டின்பி ரபாகரை கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டி உள்ளனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை தாக்கிய முதியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன்ப ட்டியை சேர்ந்தவர் ராணியம்மாள் (வயது60). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஜெய க்கொடி (73). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவ த்தன்று அத்துமீறி ராணி யம்மாள் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்தனர்.

    தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (34). இவர் அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அழகுராஜா என்பவர் இட்லி கேட்டு ஓட்டலுக்கு வந்துள்ளார். இட்லி தீர்ந்துபோய்விட்ட தாக கண்ணன் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அழகுராஜா அவரை சட்டையை பிடித்து இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு கட்டி போராட்டம் நடத்தினர்.
    • சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், கையில் ஊராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதற்கு அனுமதி அளித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுதந்திர தினத்தில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.
    • மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடை களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.

    இருந்தபோதும் சிலர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் தேனி போலீசார் உழவர்ச ந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்ற சுப்பிரமணி (வயது30) என்பவரை கைது செய்து 59 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பழனிசெட்டிபட்டி போலீசார் தெற்கு ஜெகநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சின்னச்சாமி (57) என்பவரை கைது செய்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கோம்பை போலீசார் துரைசாமிபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்பனையில் ஈடுபட்ட மணிமாறன் (42) என்பவரை கைது செய்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • டிப்பர் லாரியை மறித்து ஆய்வு செய்த போது எம் -சாண்ட் மணல் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
    • டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதிகாரிகள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுமதி சீட்டு இல்லாமல் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாக தேனிமாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கம்பம்மெட்டு சோதனை சாவடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பாண்டியராஜன் போலீசாருடன் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் உள்ள அனுமதி சீட்டுகளை ஆய்வு செய்தார்.

    அப்போது டிப்பர் லாரியை மறித்து ஆய்வு செய்த போது எம் -சாண்ட் மணல் இருந்துள்ளது. இதற்கான அனுமதி சீட்டினை லாரி டிரைவரிடம் கேட்டபோது டிரைவர் அனுமதி சீட்டு இல்லையென கூறிவிட்டு தப்பியோடிவிட்டார். டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதிகாரிகள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து உதவி புவியியலாளர் பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    • இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டை முன்னிட்டு கோடை சுற்றுலா சீசனை கருத்தில் கொண்டு இடுக்கி அணையை மே 31ந் தேதி வரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிக ளுக்கு அக்டோபர் 31ந் தேதி வரை அனுமதி அளித்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணை உள்ளது. ஆர்ச் வடிவிலும் அதன் அருகே செருதோனி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டபோதிலும் தண்ணீர் ஒன்றாக தேங்கு கிறது. மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்துக்கு உட்பட்டது.

    ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை காண அனுமதிக்கப்படுகின்றனர். இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டை முன்னிட்டு கோடை சுற்றுலா சீசனை கருத்தில் கொண்டு இடுக்கி அணையை மே 31ந் தேதி வரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஆக.31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஓணம், தசரா பண்டிகைகள் நெருங்குவ தால் இடுக்கி அணையை காண சுற்றுலா பயணிக ளுக்கு அக்டோபர் 31ந் தேதி வரை அனுமதி அளித்து நீட்டிக்கப்பட்டு ள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை கண்டு ரசிக்க லாம். நுழைவு கட்டணம் ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. காமிரா, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரண மாக புதன்கிழமைகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது
    • வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர்.

    வருசநாடு:

    விருதுநகர் மாவட்டம் வத்ராப் அருகில் அமைந்து ள்ள சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த கோவிலுக்கு செல்ல தாணிப்பாறை வழியாகவும், தேனி மாவட்டம் உப்புத்துறை வழியாகவும் 2 பாதைகள் உள்ளது. உப்புத்துறை பகுதி மேகமலை வனச்சரணா லயத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த பாதை வருடம் முழுவதும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசை அன்று மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிச னத்துக்காக நேற்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உப்புத்துறை கிராமத்திற்கு வந்து மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். மேகமலை வனப் பாதுகாப்பு வன சரகர் சாந்தினி தலை மையிலான வனத்துறையி னர் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனத்துறை யினர் யானைக்கஜம் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து கோவி லுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பிளாஸ்டிக், தீப்பெட்டி, பீடி, சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்ப ட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களுக்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர். அதேபோல மயிலாடு ம்பாறை போலீ சாரும் தொடர்ந்து பாது காப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • இதனால் அதிகாரி களுக்கும், பொதுமக்களு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியபிள்ளைபட்டியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் காளித்தாய். துணைத்தலைவராக உதயபிரகாஷ் என்பவரும், செயலாளராக ஜோதிபாசு என்பவரும் இருந்து வரு கின்றனர். இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக கூறி கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு கூட்டத்தை நடத்த விடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். 100 நாள் திட்டப்பணியில் போலி பயனாளிகளை சேர்த்துள்ளதாகவும், இதனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி உண்மையான பயனாளிகளை பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனால் அதிகாரி களுக்கும், பொதுமக்களு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரகு மான் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் பொது மக்கள் அதனை ஏற்றுக்கொ ள்ளாததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஆண்டிபட்டி அருகில் உள்ள ரெங்க சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காலை 11.30 மணிவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கூட்டத்தை நடத்த கூடாது என்றும், தீர்மானம் எதையும் நிறைவேற்ற க்கூடாது என்றும் பொது மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இந்த ஊராட்சியின் செயலாளர் எஸ்.எஸ்.புரம் ஊராட்சியையும் கூடுதலாக கவனித்து வருவதால் அங்கு கூட்டத்தை முடித்துவிட்டு இங்கு வர தாமதமானது. இதனால்தான் அதிகாரிகள் வரதாமதமானது என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கூட்டம் நடத்தப்பட்டது.

    • பி12 - நெல் விழாவில் பங்கேற்று நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
    • வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பெரியகுளம்:

    திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்களான அருண்பாரதி, ஆசிஷ்குமார், லிங்கேஸ்வரன், தேவா, மகிழ் அமுதன் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மேல்மங்கலம் பகுதியில் பெரியகுளம் வட்டார வேளாண்மை துறையினரால் நடைபெற்ற "பி12 - நெல் விழா"வில் பங்கேற்று நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் இலை வண்ண அட்டவணை கொண்டு நைட்ரஜன் பரிசோதிக்கும் முறை, இயற்கை முறையில் நெல் விதைநேர்த்தி செய்யும்முறை மற்றும் குருத்து பூச்சியை தடுக்கும் முறைகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தனர்.

    இதில் பாட ஆசிரியர்கள் டாக்டர் கண்ணபிரான், விஜயகுமார், வட்டார வேளாண் இணை இயக்குனர், காமாட்சிபுரம் சென்டகட் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×