என் மலர்
நீங்கள் தேடியது "நமது சகோதரிகள் விழிப்புணர்வு"
- ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” விழிப்பு ணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
- தொழிற்பயிற்சி மேற்கொ ண்ட 19 மாணவிகளுக்கு தொழிற்திறன் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" விழிப்பு ணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
இதில் கலெக்டர் பேசிய தாவது:
கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுத்து அவர்க ளுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் நவீன தொழிற்பயிற்சி காலத்தில் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இனியில்லை என ஒத்துக்கொள் என்ற பழமொழிக்கேற்ப பெண்கள் அனைவரும் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் மூலம் பெண்களின் வேலை வாய்பை அதிகரிக்கவும் பெண்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்து வதற்காகவும் பெண்களு க்கென தனி தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க ப்பட்டு பல்வேறு சிறப்பு தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள்புரம் பகுதியில் வசித்துவரும் அமுதா என்ற பெண் தனது கணவனை இழந்து தனது 2 ஆண் குழந்தைகளுடன் தனக்கு தெரிந்த அடிப்படை தையல் தொழிலை சிறிய அளவில் மேற்க்கொண்டு தனது குழந்தைகளை படிக்க வைத்துள்ளார்.
அமுதா கடந்த 2017-ம் ஆண்டு தனது 48 வது வயதில் ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சூவிங் டெக்னாலஜி பிரிவில் சேர்ந்து நவீன தொழில்நுட்ப தையல் பயிற்சி 1 வருட பயிற்சி பெற்றார்.
கல்வி பயின்ற சான்றிதழ் மூலம் மாவட்ட தொழில் மையத்தை அணுகி கனரா வங்கி மூலம் ரூ.75,000/- கடன் உதவி பெற்று சிறிய அளவில் நடத்தி வந்த தையல் தொழில் இன்று 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் அளவிற்கு இந்த நவீன தொழிற் பயிற்சி கல்வி மாற்றியுள்ளது.
கைத்தொழில் கற்பதன் மூலம் தனக்கென வருமானத்தை உருவாக்கிக் கொண்டு தனது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கும் 48 வயதிலும் கல்வியைக் கற்று சுயதொழில் தொடங்கி முன்னேற முடியும் என்பதற்கும் ஆண்டிபட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று இன்று தொழில் முனை வோராக உள்ள அமுதாவே சான்றாக உள்ளார். மேலும் அமுதா புதிய நிறுவனங்களை தொடங்கி மென் மேலும் வளர்ந்து பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும் என பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சிறப்பாக தொழிற் பயிற்சி மேற்கொ ண்ட 19 மாணவிகளுக்கு தொழிற்திறன் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தொழிற்பயிற்சி மேற்கொண்டதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அமுதா தெரிவித்ததாவது:-
2012 ஆம் ஆண்டு எனது கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். உறவினர் உதவியால் தையல் தொழில் கற்று அதன் மூலம் மாதம் 3 ஆயிரம் வரை மாத வருமானம் கிடைத்தது. ஆண்டிபட்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் பற்றி அறிந்து அங்கு தொழிற்திறன் பயிற்சி கற்றதன் காரணமாக கனரா வங்கி மூலம் ரூ.75 ஆயிரம் கடன் உதவி பெற்று தொழிலை சிறப்பாக நடத்தி இதன் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. என் வாழ்க்கை தரத்தை உயர்த்திய தமிழ்நாடு அரசுக்கும், ஆண்டிபட்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.






