என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவதானப்பட்டி பிள்ளை முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
    X

    பூஜையில் கலந்துகொண்ட பக்தர்கள்.

    தேவதானப்பட்டி பிள்ளை முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

    • 2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மங்கல இசை, கணபதி பூஜை மற்றும் பாலிகை பூஜை, யாகசாலை பூஜை, 2ம் கால தியாக தீப ஆராதனை நடைபெற்றது.
    • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி காந்தி மைதான வீதியில் உள்ள பிள்ளைச் செல்வம் முத்துமாரியம்மன் திருக்கோவிலில் திருக்குட பன்னீராட்டு பெரும் சாந்தி பெருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று மங்கள இசை உடன் நவக்கிரக பூஜைகள் ஹோமங்கள் தெடங்கப்பட்டு அம்மனுக்கு தீப ஆராதனை நடத்தப்பட்டது.

    2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மங்கல இசை, கணபதி பூஜை மற்றும் பாலிகை பூஜை, யாகசாலை பூஜை, 2ம் கால தியாக தீப ஆராதனை நடைபெற்றது. 3ம் நாள் நிகழ்ச்சியாக நாளை கும்பாபிஷேகமும், ஆராதனையும், அன்னதானமும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் அருணாசேகர் மற்றும் கவுரவ தலைவர் மனோகரன் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் செய்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×