search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    சிலமலை ஊராட்சி மல்லிங்காபுரம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    போடி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், சத்துணவு மையங்களிலும் ஆய்வு மேற்கொ ண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, சிலமலை, நாகலாபுரம், மற்றும் ராசிங்காபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    உப்புக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி களையும், 15வது நிதிக்குழு மானியத்திட்ட த்தின் கீழ் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளையும்,

    டொம்பு ச்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.60 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தி கூடம் அமைக்கும் பணிகளையும், சிலமலை ஊராட்சி மல்லிங்காபுரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.55 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் சமத்துவ மயானத்தில் சுற்றுச்சுவர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 4 லட்சம் மதிப்பீட்டில் குழாய்கள் பதிக்கும் பணிகளையும், நாகலாபுரம் ஊராட்சியில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளையும்,

    மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இணைய தளம் வரிவசூல் செய்யும் பணிகளையும்,

    ராசிங்காபுரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி சமையல் அறை கட்டிடம் அமைக்கும் பணி களையும் பார்வையிட்டார். ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மதிய உணவு வழங்கப்படுவதையும், உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், அங்க ன்வாடி மையங்கள், நூலக ங்கள், சத்துணவு மையங்க ளிலும் ஆய்வு மேற்கொ ண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×