சின்னமனூர் அருகே தின்னர் குடித்த பெயிண்டர் பலி

குடி பழக்கத்துக் அடிமையான வாலிபருக்கு இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கினார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சின்னமனூர்:

தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் கணபதி (வயது42). திருமண மாகாதவர். குடி பழக்கத்துக் அடிமையானவர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.

பெயிண்டிங் வேலை பார்த்து வந்த கணபதிக்கு சம்பவத்தன்று சீலையம்பட்டி சமத்துவ புரத்தில் வேலை பார்த்தபோது வலிப்பு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து விட்டார்.

தேனி க.விலக்கு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் கருப்புத்துரை கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com