சின்னமனூரில் முதியவர் தற்கொலை

முதியவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சின்னமனூர் :

தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது73). இவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு நெல் வாங்கி வர சென்றார். அப்போது நெல் மூட்டையுடன் தவறி கீழே விழுந்தார்.

படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com