என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
குள்ளபுரத்தில் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளை கண்டித்து போராட்டம்
- குள்ளப்புரம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள் செயல்பட்டு வருகிறது.
- குள்ளப்புரம் கிராம மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியாகும் தூசியால் குள்ளப்புரம் கிராம மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வந்தனர்.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி, வெண்டை, கத்தரி, வாழை, தென்னை உள்ளிட்ட நிலங்களும் பாதிப்படைந்து வந்தன. வீடுகளுக்குள் தூசி படர்ந்து காணப்பட்டதுடன் உணவு, குடிநீரிலும் நச்சு கலக்கும் நிலை உருவானது.
இரவு பகல் பாராமல் 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் செல்வதால் தூக்கமின்றி தவித்து வந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
எனவே குள்ளப்புரம் கிராம மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரி மற்றும் கிரசர்களை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.






