என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பெரியகுளம் அருகே பைக்கில் தவறிவிழுந்து அக்குபஞ்சர் டாக்டர் சாவு
- பைக்கை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
- தேவதானப்பட்டி-ஆண்டிபட்டி சாலையில் திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
தேவதானப்பட்டி:
திருச்சி மாவட்டம் எட மலைப்பட்டி நல்லகண்ணு தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(37). இவர் அக்குபஞ்சர் டாக்டராக வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி செல்வவிநாயகர் நகரில் வசித்துவந்தார். சம்பவத்தன்று திருச்சியில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வத்தலக்குண்டு டூவிலர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு திருச்சி சென்றார். மீண்டும் திரும்பிவந்து பைக்கை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். தேவதானப்பட்டி-ஆண்டிபட்டி சாலையில் திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயங்க ளுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி நர்மதா கொடுத்த புகாரின்பேரில் ஜெய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






