search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Criminal action"

    • விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்ற செயல் அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
    • இனிவரும் காலங்களில் பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, பொத்தனூர் ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்ற செயல் அலு வலர்கள் உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் பரமத்தி, பரமத்திவேலூர், பொத்த னூர் ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இனிவரும் காலங்களில் பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.
    • இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும்.

    தேனி:

    தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணை ப்பானது, 85% மின்க ம்பங்கள் மூலமாகவும், 15% தரை வழியாகவும் இணைத்திட நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்த ப்பட்டுள்ள அறையானது சம்பந்த ப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்க ப்பட்டு வரு கிறது.

    இத்திட்ட த்திற்கான உபகரணங்களை பாதுகா த்திடவும். தடை யில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்தி டவும், பி.ஒ.பி பொறுத்த ப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் சம்பந்த ப்பட்ட கிராம ஊராட்சி செயலா ளர்களால் கண்காணிக்கப்பட உள்ளது.

    இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பி.ஒ.பி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யு.பி.எஸ் மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகள்.

    எனவே உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவி த்துள்ளார்.

    • நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தோ்வில் 1,472 போ் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா்.

    ஊட்டி,

    குரூப் 1 தோ்வில் ஆள்மாறாட்டம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (தொகுதி 1) பதவிக்கான நேரடி நியமன எழுத்துத் தோ்வு நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெறவுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 3 மையங்கள், புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ. சி.எம்.எம். மேல்நிலைப் பள்ளி, பெத்லேகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 6 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

    இத் தோ்வில் 1,472 போ் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா். தோ்வைக் கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். தோ்வுக் கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை தாசில்தார் நிலையில் 3 நடமாடும் குழு, தோ்வுக் கூடங்களில் தோ்வைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள் தலைமையில் கண்காணிப்பாளா்கள் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் 6 மேற்பாா்வை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

    மேலும், தோ்வு எழுத வரும் மாற்றுத் திறனாளிகள் எவரேனும் இருப்பின் அவா்களுக்கு கீழ் தளத்தில் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வு எழுத வரும் பாா்வையற்றோா் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு அறை ஒவ்வொரு மையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாா்வையற்றோா் தோ்வு எழுத வேண்டி உடன் வரும் எழுத்தாளா் அனுமதிக்க ப்பட்டுள்ளனா். பாா்வையற்றோருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.

    தோ்வு எழுத வரும் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோ்வுக் கூடங்களுக்குள் கைப்பேசி, கால்குலேட்டா், எலக்ட்ரானிக் கை கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சிவக்குமார் பணத்தை பெற்றுக்கொண்டு துணை தாசில்தார் போல் கையெழுத்து போலியாக போட்டு பட்டா தயாரித்து கொடுத்து வந்ததால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவகுமாரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் விவகா ரத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள், தொழில் அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் போலி பட்டா தயார் செய்து மக்களை மோசடி செய்த கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #HighCourt #TamilnaduGovernment #CooperativeUnionElection
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.  இந்த தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடப்பதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.

    சென்னை புதுப்பேட்டை கூட்டுறவு சங்கம், சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், தேர்தலின்போது, போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து, பலர் கள்ள ஓட்டு போட்டதாகவும், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இல்லாதவர்களை கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று காலையில் விசாரித்தார்.

    பின்னர், ‘கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தினமும் தொடரப்படுகின்றன. ஏராளமாக முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றன. எனவே, இந்த வழக்குகளின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    இதன்படி, பிற்பகலில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்தபோது, ஆணையர் ராஜேந்திரன் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கூடுதல் செயலாளர் வாசுகி ஆஜரானார்.

    அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘கூட்டுறவு தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. விதிகளை மீறி செயல்படவில்லை. விண்ணப்பங்கள் எல்லாம் தேர்தல் விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படுகிறது’ என்று வாதிட்டார்.

    மனுதாரர்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் ஏழை, எளிய பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏழை, எளிய மக்களுக்காக இந்த கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

    ஆனால், அப்படிப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் அழியும் நிலையில் உள்ளது. இது வேதனை அளிக்கிறது. அழியும் நிலையில் உள்ள இந்த சங்கங்களை மேம்படுத்தவேண்டும். அதற்காக அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். சரியான முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

    ஆனால், கூட்டுறவு சங்க தேர்தலில் பல முறைகேடுகள் நடக்கிறது. சில தேர்தல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். விதிகளை மீறி, சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் என்று மனுதாரர்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

    எனவே, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தேர்தல் அதிகாரிகள் மீது தேர்தல் நன்னடத்தை விதிகளின் படியும், கிரிமினல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையில் இருந்து தவறும்போது, அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

    எனவே, கூட்டுறவு சங்க தேர்தலில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் ஆணையத்திடம் புதிய புகாரை உடனே கொடுக்கவேண்டும். அந்த புகாரை பெற்றுக்கொண்ட பின்னர், தேர்தல் ஆணையம் வெளிப்படையான, நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

    தேவைப்பட்டால், புகார் கொடுத்தவரை நேரில் அழைத்து விசாரிக்கலாம். இதன்பின்னர், அந்த புகார் மனு மீது 8 வாரத்துக்குள் இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

    முடிவு எடுக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் முடிவை வெளியிடலாம். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளாலும், தேர்தல் முடிவு வெளியிட்டதாலும், யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம், பிரிவு 90(1)ன் கீழ் தமிழக அரசிடம் புகார் மனு கொடுத்து முறையிடலாம்.

    இந்த புகார் மனுவை 6 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலித்து, தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார்.  #CooperativeUnionElection #HighCourt #Tamilnews 
    ×