search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
    X

    குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

    • அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சிவக்குமார் பணத்தை பெற்றுக்கொண்டு துணை தாசில்தார் போல் கையெழுத்து போலியாக போட்டு பட்டா தயாரித்து கொடுத்து வந்ததால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவகுமாரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் விவகா ரத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள், தொழில் அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னிமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் போலி பட்டா தயார் செய்து மக்களை மோசடி செய்த கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×