கிராம ஊராட்சிகளில் இணையதள வசதி உபகரணங்களை திருடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை

இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணை ப்பானது, 85% மின்க ம்பங்கள் மூலமாகவும், 15% தரை வழியாகவும் இணைத்திட நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்த ப்பட்டுள்ள அறையானது சம்பந்த ப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்க ப்பட்டு வரு கிறது.

இத்திட்ட த்திற்கான உபகரணங்களை பாதுகா த்திடவும். தடை யில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்தி டவும், பி.ஒ.பி பொறுத்த ப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் சம்பந்த ப்பட்ட கிராம ஊராட்சி செயலா ளர்களால் கண்காணிக்கப்பட உள்ளது.

இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பி.ஒ.பி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யு.பி.எஸ் மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகள்.

எனவே உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவி த்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com