என் மலர்
நீங்கள் தேடியது "price of cardamom"
- இடுக்கி மாவட்டத்திலும் தமிழ கத்தில் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று ப்பகுதி களிலும் தென்மேற்கு பருவக்காற்று மழை சரிவர பெய்யாததால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைந்தது.
- ஏலக்காய் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.2000 தாண்டி விற்பனையாவதால் விவசாயிகளும், ஏலக்காய்களை இருப்பு வைத்து வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
போடி:
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் ஏலக்காய் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மிகவும்பிரசித்தி பெற்றது. இந்தியாவிலேயே அதிக அளவில் ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் இங்கு நடைபெறுவதால் இதற்கு ஏலக்காய் நகர் என்று மற்றொரு பெயரும் உண்டு. இங்குள்ள போடி மற்றும் கேரள எல்லைப் பகுதிகளான பூப்பாறை, வண்டமேடு, தோண்டி மலை, ராஜா காடு, பியால் ராவ், கஜானா பாறை போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் ஏலக்காய் போடி நகரில் உள்ள மத்திய அரசு ஸ்பைசஸ் போர்டு ஏலக்காய் வர்த்தக மையம் மற்றும் பல்வேறு தனியார் மையங்கள் மூலம் காய்கள் ரகம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வியாபா ரிகளால் கொள்முதல் செய்ய ப்படுகிறது.
அதன்பின் பல்வேறு ரகங்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இடுக்கி மாவட்டத்திலும் தமிழ கத்தில் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று ப்பகுதி களிலும் தென்மேற்கு பருவக்காற்று மழை சரிவர பெய்யாததால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைந்தது.
கடந்த மாதம் வரை முதல் ரகம் சார்ந்த ஏலக்காய் கிலோ ரூ.1800 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த 10 தினங்களாக கிலோ ரூ.600லிருந்து ரூ.800 வரை உயர்ந்து தற்போது ரூ.2400 முதல் ரூ.2600 வரை விற்கப்படுகிறது. கிலோ ரூ.1200 முதல் ரூ.1400 வரை விற்கப்பட்ட ரகம் பிரிக்கப்படாத ஏலக்காய் தற்போது ரூ.1800 முதல் ரூ.2,100 வரை விற்க ப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏலக்காய் விலை உயர்வு அதிக லாபத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.ஆனாலும் விலை உயர்வுக்கு முன்பு அண்டை மாநிலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏலக்காய் ஏற்றுமதி வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த விலை உயர்வினால் எந்தவித பலனும் இன்றி வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3000 தாண்டி விற்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காய் விலை கடும் சரிவை சந்தித்து வந்தது. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்பு ஏலக்காய் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.2000 தாண்டி விற்பனையாவதால் விவசாயிகளும், ஏலக்காய்களை இருப்பு வைத்து வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்






