என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்ப பதிவு முகாம்"

    • 2-ம் கட்டமாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திம்மரசநாயக்கனூர், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அந்த நாளில் பதிவு செய்ய தவறவிட்டவர்கள் கடைசி 2 நாட்களில் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கடந்த மாதம் 24ந் தேதி தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்ய முதற்கட்டமாக உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய வட்டங்களில் 24.07.2023 முதல் 04.08.2023 வரை 259 முகாம்கள் நடத்தப்பட்டு 1,50,517 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    2-ம் கட்டமாக தேனி, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர் ஆகிய வட்டங்களில் நேற்று முதல் 16-ந் தேதி வரை 258 முகாம்கள் நடைபெற உள்ளதை தொடர்ந்து ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திம்மரசநாயக்கனூர், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது அவர் தெரிவித்ததாவது:-

    பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் இணைய பதிவு செய்யப்பட்டு ஒப்பு கைச்சிட்டு வழங்கப்படும். சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, ரேசன் அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, டோ க்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்த நாளில் பதிவு செய்ய தவறவிட்டவர்கள் கடைசி 2 நாட்களில் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×