என் மலர்
நீங்கள் தேடியது "350 Ganesha idols were consecrated"
- தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் 8-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் தேனியில் நடைபெற்றது.
- தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேனி:
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் 8-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன். ரவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இராமராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சோலைராஜன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விஜயா எலக்ட்ரிக்கல் உரிமையாளர் பாலாஜி, வினோரா பவுண்டேசன் நிறுவனர் ராஜன் மற்றும் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று 350-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் மற்றும் ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட பொதுச்செய லாளர் மாய.லோகநாதன் நன்றி கூறினார்.






