என் மலர்tooltip icon

    தேனி

    • 2 ஆண்டுகள் முடியும் தருவாயில் இன்னும் கட்டிட பணி முழுமை பெறாமலும், பயன்பாட்டிற்கு வராமலும் தொய்வான நிலையில் உள்ளது.
    • ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் இதுபோன்று பல்வேறு மக்களின் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் தேக்கம் அடைந்து வருகிறது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் சுடுகாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடியில் மின் மயானம் அமைப்பதற்கு ஆண்டிபட்டி பேரூராட்சி அடிப்படை வசதி திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இந்நிலையில் 2 ஆண்டுகள் முடியும் தருவாயில் இன்னும் கட்டிட பணி முழுமை பெறாமலும், பயன்பாட்டிற்கு வராமலும் தொய்வான நிலையில் உள்ளது.

    கடந்த 4 மாதங்களுக்கு முன் தேனி மாவட்ட கலெக்டர் மின் மயான கட்டிட பணியை ஆய்வு செய்த நிலையிலும் கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் இன்னும் காலதாமதம் ஏற்படுவதாக தெரிகிறது.

    மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் இதுபோன்று பல்வேறு மக்களின் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. அணைக்கு 94 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2237 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 46.74 அடியாக உள்ளது.

    நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1614 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.24 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 27.84 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு 17.6, தேக்கடி 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • எதற்காக இரும்பு வியாபாரியை கொல்ல முயன்றனர்? என போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
    • சரியாக வெட்டினாயா? இல்லையா? அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என கேட்டு தனது காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபாலபாண்டியன் (வயது 55) பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது கடையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த வேணுகோபாலபாண்டியன் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மனைவி உமா மகேஸ்வரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த அழகுமலை மகனான கார் டிரைவர் முத்து காமாட்சி (23), அவரது நண்பர்களான மூர்த்தி மகன் செல்வக்குமார் (23), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணப்பன் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    எதற்காக இரும்பு வியாபாரியை கொல்ல முயன்றனர்? என போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

    வேணுகோபால பாண்டியனின் மகள் 16 வயதுடைய பிளஸ்1 மாணவியும், முத்து காமாட்சியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் பெரியகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் அவரை தங்க வைத்துள்ளனர். அங்கு சென்றும் முத்துகாமாட்சி மாணவியுடன் பேசி பழகி வந்துள்ளார்.

    மேலும் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனையும் பெற்றோர்கள் பறித்துக் கொண்டனர். காதலுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வந்ததால் தந்தையை கொலை செய்ய மாணவி முடிவு செய்துள்ளார். இதனை தனது காதலனிடம் கூறியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று வேலை முடித்து தனியாக வந்து கொண்டு இருந்த இரும்பு வியாபாரி வேணுகோபால பாண்டியனை மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். அரிவாளால் வெட்டி விட்டு முத்து காமாட்சி தனது காதலிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். சரியாக வெட்டினாயா? இல்லையா? அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என கேட்டு தனது காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். போலீசார் முத்துகாமாட்சியின் செல்போனை வாங்கி பார்த்த போது மாணவி அனுப்பிய குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய 3 பேர் மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மகள் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது.

    சின்னமனூர்:

    தேனி அருகே வீரபாண்டி கூழையனூரை சேர்ந்தவர் சிவா (வயது32). இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது. இதில் காயம் அடைந்த சிவாவை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிவாவின் தந்தை சந்தானம் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
    • இதனால் தனலட்சுமி கோபித்துக்கொண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது27). இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். அலெக்ஸ்பாண்டியன் முனிசிபல் அலுவலகத்தில் தெருவிளக்கு பொருத்தும் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதனால் தனலட்சுமி கோபித்துக்கொண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். 2 பேரும் 2 மாதம் சேர்ந்து வாழ நீதிபதி அறிவுரை வழங்கி உள்ளார்.இந்த நிலையில் மீண்டும் தகராறில் ஈடுபட்ட அலெ க்ஸ்பாண்டியன் தனலட்சு மியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து அலெக்ஸ்பா ண்டியனை கைது செய்தனர்.

    • அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கோடை காலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    மேலும் அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 400 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 47.01 அடியாக சரிந்துள்ளது. வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்று விட்டது.

    எனவே மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.05 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
    • ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஐஸ்வர்யா (24) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினர். இதைப் பார்த்ததும் அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • எங்கு தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரிய குளம் போலீசில் புகார் அளித்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 49), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரிய குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

    • காலையில் பொது அறிவு மற்றும் மதியத்தில் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 2367 ஆண்கள், 517 பெண்கள் என மொத்தம் 2884 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 618 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேனி:

    தமிழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு வீரர்களுக்கு ஆட்கள் சேர்ப்பதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு ஆணையம் எழுத்து தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் 3488 பேர் விண்ணப்பி த்திருந்தனர். இதற்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றது. காலையில் பொது அறிவு மற்றும் மதியத்தில் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 2367 ஆண்கள், 517 பெண்கள் என மொத்தம் 2884 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    ெமாத்தம் 604 பேர் ஆப்செண்ட் ஆகினர். இதில் 477 ஆண்களும், 127 பெண்களும் அடங்குவார்கள். தேர்வு மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 618 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை காவலர் பயிற்சி கல்லூரி பயிற்சித்துறை தலைவர் தமிழ்சந்திரன், தணிக்கை அலுவலராக நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை நேரடியாக பார்வையிட்டார் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் ேடாங்கரே தெரிவித்துள்ளார்.

    • பாரதி நகரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூங்கா அமைக்கும் பணிகளையும் பேரூராட்சி அலுவல கத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின்போது அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே தென்கரை, வடுகபட்டி, தேவதானப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தென்கரை பேரூராட்சி பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஹவுசிங்போர்டு காலனியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகள், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணிகள், கைலாசப்பட்டி 12-வது வார்டு பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பறை கட்டுமான பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஸ்டேட்பேங்க் காலனியில் ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்தல் பணி, பாரதி நகரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூங்கா அமைக்கும் பணிகளையும் பேரூராட்சி அலுவல கத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் பொதுநூலகம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டதையும், பெரியகடை வீதியில் 0.980 கி.மீ தூரத்திற்கு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை புனரமைக்கும் பணிகளையும், மற்றும் பொதுநூலகத்தில் வாசகர்களுக்கு வைக்க ப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் வருகை பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வாசகர்களுக்கான புத்தகங்க ளை முறையாக பராமரித்திட நூலக அலு வலருக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியில் மஞ்சளாறு சாலை பகுதியில் ரூ.240 லட்சம் மதிப்பீட்டில் 0.025 கி.மீ தூரத்திற்கு பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நாடக மேடையினையும், மற்றும் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறைகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடி க்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செயல் அலுவலர் நிர்வாகம் (பொறுப்பு) சுப்பிரமணியன், செயல் அலுவலர்கள் மோகன்குமார்(தென்கரை), விஜயா (தேவதானப்பட்டி), சுரேஷ்(வடுகபட்டி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கேரளாவிற்கு ஏலத்தோட்ட தொழிலா ளர்களை ஜீப்பில் அழை த்துச் செல்லும் வேலை பார்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று தனது வாகனத்தில் ஆட்களை இறக்கிவிட்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் வந்தபோது கேரளா மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த 4 பேர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வாக னத்தை பின் தொடர்ந்து வந்தனர்.

    கம்பம்:

    கம்பம் அருகில் உள்ள காமயக்கவுண்டன் பட்டி யை சேர்ந்தவர் ஜெயராஜ் (54). இவர் கேரளாவிற்கு ஏலத்தோட்ட தொழிலா ளர்களை ஜீப்பில் அழை த்துச் செல்லும் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது வாகனத்தில் ஆட்களை இறக்கிவிட்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த பிரபு (29), ஜெயபால் (29), ெஜயபாண்டி (22), மகேஷ் (24) ஆகிய 4 ேபரும் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வாக னத்தை பின் தொடர்ந்து வந்தனர்.

    அவர்கள் ஜெயராஜின் வாகனத்தை இடிக்கும் வகையில் ஆபத்தான முறையில் பயணித்ததால் இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மற்றும் அம்சாபுரம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மாமனார்கள்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த குழந்தை மனைவி பழனியம்மாள் (53). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். அதன் பிறகு மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகில் உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி பிரவீனா (24). இவர் வேலுச்சாமிக்கு 2வது மனைவியாவார். இவர்களுக்கு 1 பெண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×