தேனி அருகே விபத்தில் மெக்கானிக் பலி

இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

தேனி அருகே வீரபாண்டி கூழையனூரை சேர்ந்தவர் சிவா (வயது32). இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது. இதில் காயம் அடைந்த சிவாவை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிவாவின் தந்தை சந்தானம் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com