என் மலர்tooltip icon

    தேனி

    • 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை முருகன் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து செஸ்போர்டு தருவதாக கூறியுள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான கேரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வீட்டில் வைத்திருந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை முருகன் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து செஸ்போர்டு தருவதாக கூறியுள்ளார். பின்னர் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கேட்ட போது, முருகன் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார். இதனையடுத்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையான பாரதம் சேவா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீமாதவ சேவா மையம் மற்றும் மலை ஆர்மி கோச்சிங் சென்டர், பாய்ஸ்,கோர்ஸ் கிளப் இணைந்து தூய்மையான பாரதம் சேவா நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

    பின்னர் தலைமை டாக்டர் சிவக்குமார், அரசு டாக்டர் நீதிமன்னன் தலைமையில் மலை கோச்சிங் சென்டர் கொடியரசன், ஸ்ரீமாதவ சேவா மைய பொறுப்பாளர் , தூய்மை பாரதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஸ்ரீமாதவ சேவா மையத்தின் மாவட்ட, நகர மற்றும் இந்துமுன்னணி, பா.ஜ.க. பொறுப்பாளர்கள் மற்றும் 100-க்கும்மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது.
    • பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து வரும் தமிழக - கேரள எல்லை வனப்பகுதிகளிலும், கேரளாவின் உள் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் வினாடிக்கு 822 கன அடி நீர் வந்த போது அணையின் நீர் மட்டம் 119.65 அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 1708 கன அடியாக இருந்த நீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 120.25 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு 2593 கன அடி நீர் வருகிறது.

    இதனால் அணையின் நீர் மட்டம் 121.20 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2886 மி.கன அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நீர் திறப்பு அதிகரிப்பின் காரணமாக பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் 48.69 அடியாக உள்ளது. நீர் வரத்து 139 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1826 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.50 அடி. வரத்து 11 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 90.20 அடி. வரத்து 5 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 49.43 மி.கன அடி.

    பெரியாறு 49.4, தேக்கடி 21.6, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை.

    சின்னமனூர்:

    தேனி மாவட்ட ஜெய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் சின்னமனூர் ராமகிருஷ்ண சேவாஸ்ரமம் மடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நிறுவனதலைவர் ரவி தலைமை தாங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்டோர்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது குறைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில், தேனி மாவட்ட த்தில் சிறப்பு பருவமாக நெற்பயிருக்கும், ராபி பருவ பயிர் மக்கா ச்சோளத்திற்கும் பிரதம மந்திரி பயிர் கா ப்பீட்டுத் திட்டம் செயல்படு த்தப்பட உள்ளது.
    • இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விருப்பத்தின் அடிப்படை யில் பதிவு செய்யப்படுவர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில், சம்பா நெற்பயிர் மற்றும் ராபி பருவ மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் புதுப்பிக்க ப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கேட்டு க்கொண்டுள்ளார்.

    பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் எதிர்பா ராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்ப ங்களை கடை பிடிப்பதை ஊக்குவிப்பதற்காகவும் தொடர்ந்து செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில், தேனி மாவட்ட த்தில் சிறப்பு பருவமாக நெற்பயிருக்கும், ராபி பருவ பயிர் மக்கா ச்சோளத்திற்கும் பிரதம மந்திரி பயிர் கா ப்பீட்டுத் திட்டம் செயல்படு த்தப்பட உள்ளது.

    இதன்படி நடப்பு ஆண்டில் தேனி மாவட்ட த்தில் சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு 14 பிர்க்காக்கள் மற்றும் மக்காச்சோளப் பயிருக்கு 7 பிர்க்காக்கள் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விருப்பத்தின் அடிப்படை யில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பொது சேவை மையங்கள் மூலமாகவும், விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர கடைசி நாள் நவம்பர் 15-ந் தேதி மற்றும் மக்காச்சோள பயிருக்கு சேர கடைசி நாள் டிசம்பர் 30-ந் தேதி ஆகும்.

    நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.528.75 மற்றும் மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.429 பிரிமீயமாக செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்ப த்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டுத் தொகையை செலுத்திய பின்னர் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளா ண்மை விரிவாக்க மையத்தி ல் உள்ள அலுவலர்களை அணுகி தெரிந்து கொ ள்ள லாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்து ள்ளார்.

    • தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி - தேனி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது.

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே குள்ளப்புரம் கோவில் புரத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54). இவர் தனது உறவினர் பழனிச்சாமி (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி - தேனி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த 2 பேரும் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே பழனிச்சாமி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். நண்பர்கள் 8 பேருடன் தேனி மாவட்டம் போடி வந்தார். தேவாரம் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் தலைகீழாக கவிழ்ந்ததில் பாலமுருகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் அவருடன் வந்த 8 பேரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சின்னமனூரில் ஏர் உழவன் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக முதலாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது.
    • மேகமலை செல்லும் சாலையில் மாடுகள் 7 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் ஏர் உழவன் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக முதலாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான் சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, தேன் சிட்டு, கரிச்சான் என 6 பிரிவின்கீழ் சுமார் 150க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    சின்னமனூர் மேகமலை செல்லும் சாலையில் மாடுகள் 7 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. முதல்பரிசு 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மற்ற வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றிபெற்ற மாடுகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சின்னமனூர் இரட்டை மாட்டு வண்டி நலச்சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. போட்டியை அ.இ.அ.தி.மு.க. தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலாமணி மார்பன் ெகாடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சின்னமனூர் நகர் பொறுப்பாளர்பிச்ச ைக்கனி, மாவட்ட பிரதிநிதி மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பந்தயத்தினை சாலையோரம் இருபுறங்களிலும் பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் போது தேனி மாவட்டம் மற்றும் முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமல் இருந்தது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணிகள் மேற்கொண்ட விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் மழையை எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 822 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1709 கன அடியாக அதிகரித்தது. மேலும் 119.65 அடியாக இருந்த நீர் மட்டம் 120 அடியை கடந்து 120.25 அடியாக உள்ளது. ஒரே நாளில் ½ அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 48.65 அடியாக உள்ளது. 148 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.45 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 90.03 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 39, தேக்கடி 38, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதி அணை 3.4, வீரபாண்டி 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • விழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சியாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
    • சுருளி ப்பகுதியில் உள்ள பூங்காவில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்து றை சார்பில் சுருளி சாரல் திருவிழாவை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கடந்த 29-ந் தேதி தொடங்கி வைத்தார்.

    6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சியாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும் மஞ்சப்பையின் முக்கியம் கருதி சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வெள்ள பாண்டியன் நாட்டுக்குழுவின் கிராமிய கலைநிகழ்ச்சிகள், ஆணைமலையான்பட்டி, அணைப்பட்டி, கோம்பை, சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் புலித்தேவன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் சார்பில் சிலம்பம் கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுத்துறையின் சார்பில் பலூன் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி களும் சிறப்பாக நடை பெற்றது. சுருளி ப்பகுதியில் உள்ள பூங்காவில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளா ண்மைத்துறை, தோட்ட க்கலைத்துறை, சமூக நலத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்க ப்பட்டிருந்த விழி ப்புணர்வு கண்காட்சிகளை சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    மேலும் விழாவில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில், மதுரை கோவிந்தராஜன் கலை குழுவின் கலைநிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நாய்கள் கண்காட்சி, விளையாட்டுத்துறையின் சார்பில் இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளது.

    • இந்த பஞ்சமி நிலத்ைத மீட்க கோரி தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை
    • கம்யூனிஸ்ட்டு கட்சியினர், நில உரிமையா ளர்கள், பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொடைக்கானல் சாலையில் தனியார் நிறுவனம் பட்டியல் இன மக்களுக்காக வழங்கப்பட்ட 4 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் முறைேகடாக வீடு கட்டி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பஞ்சமி நிலத்ைத மீட்க கோரி தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததால் தீண்டாைம ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் கம்யூனிஸ்ட்டு கட்சியினர், நில உரிமையா ளர்கள், பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊர்வலமாக சென்ற அவர்களை தேவதா னப்பட்டி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து சாமுவேல்ராஜ் கூறுகையில்,

    தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களில் முறைகேடாக பட்டா பெற்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களை மீட்க வேண்டும். உரிய மக்களிடம் நிலத்ைத ஒப்படைக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்றார்.

    • கட்டுமான பணியின் போது பழமையான சுவர் இடிந்து தொழிலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள ஆழந்தழிர்தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமர்(51). கட்டிட தொழி லாளி. இவர் சம்பவத்தன்று ரவி என்பவருடன் சேர்ந்து சோலைதேவன்பட்டியில் உள்ள ராகவன் என்பவரது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது அங்கிருந்த பழமையான சுவர் இடிந்து ராமர் மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய ராமரை அங்கிருந்து தொழிலாளர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராமர் உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் உடன் பணிபுரிந்து கொண்டிருந்த வேலுச்சாமி (60) என்பவரு க்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடமலை க்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது.
    • வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது.

    இேதபோல் வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உள்ளது. வரத்து 822 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 2565 மி.கன அடி.

    வைைக அணையின் நீர்மட்டம் 48.62 அடியாக உள்ளது. வரத்து 102 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1818 மி. கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. வரத்து 23 கன அடி. இருப்பு 403.25 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.87 அடி. வரத்து 5 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 49 மி.கன அடி.

    பெரியாறு 30.6, தேக்கடி 24.2, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 2.8, சண்முகாநதி அணை 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×