தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கூடலூர்:

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் போது தேனி மாவட்டம் மற்றும் முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமல் இருந்தது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணிகள் மேற்கொண்ட விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் மழையை எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று 822 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1709 கன அடியாக அதிகரித்தது. மேலும் 119.65 அடியாக இருந்த நீர் மட்டம் 120 அடியை கடந்து 120.25 அடியாக உள்ளது. ஒரே நாளில் ½ அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 48.65 அடியாக உள்ளது. 148 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.45 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 90.03 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 39, தேக்கடி 38, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதி அணை 3.4, வீரபாண்டி 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com