search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase Water Flow"

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் போது தேனி மாவட்டம் மற்றும் முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமல் இருந்தது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணிகள் மேற்கொண்ட விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் மழையை எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 822 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1709 கன அடியாக அதிகரித்தது. மேலும் 119.65 அடியாக இருந்த நீர் மட்டம் 120 அடியை கடந்து 120.25 அடியாக உள்ளது. ஒரே நாளில் ½ அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 48.65 அடியாக உள்ளது. 148 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.45 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 90.03 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 39, தேக்கடி 38, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதி அணை 3.4, வீரபாண்டி 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • தொடர் மழை காரணமாக வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.29 அடியாக உள்ளது. நேற்று 1076 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1510 கன அடியாக அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் தேவதா னப்பட்டி, வடுகபட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நேற்று முகூர்த்தநாள் என்பதால் விசேஷங்களுக்கு சென்று திரும்பியவர்களும் குறித்த நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர்.

    இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.29 அடியாக உள்ளது. நேற்று 1076 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1510 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1519 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4695 மி.கன அடி.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 40.40 அடியாக உள்ளது. வரத்து 1481 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 7234 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 40 கன அடி. இருப்பு 433.28 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடி. வரத்து 203 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 100 மி. கன அடி.

    ஆண்டிபட்டி 18.2, அரண்மனைபுதூர் 12.8, பெரியகுளம் 29, மஞ்சளாறு 17, சோத்துப்பாறை 28, வைகை அணை 8.6, போடி 15.2, உத்தமபாளையம் 1.6, கூடலூர் 3.4, பெரியாறு 16, தேக்கடி 17.2, சண்முகநாதி அணை 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கல்லணை கால்வாயில் இருபுறமும் கரைகளை தொட்டபடி ஆர்ப்பரித்துக் கொண்டு காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் கால்வாய் நீருடன் மழை நீரும் சேர்ந்து ஓடுகிறது.

    தஞ்சாவூர்:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகள் நிரம்பி உள்ளன.

    இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 51 ஆயிரத்து 893 கன அடியாக அதிகரித்தது.

    இது நேற்றைய விட அதிகமாகும்.

    இதையத்து கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 4812 கன அடி, வெண்ணாற்றில் 3010 கன அடி, கல்லணை கால்வாயில் 2017 கன அடி, கொள்ளிடத்தில் 52105 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக கல்லணை கால்வாயில் இருபுறமும் கரைகளை தொட்டபடி ஆர்ப்பரித்துக் கொண்டு காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தஞ்சையில் கல்லணை கால்வாயில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    இன்று தஞ்சையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கல்லணை கால்வாயில் காவிரி நீருடன் மழை நீரும் சேர்ந்து ஓடுகிறது. 

    ×