கடமலைக்குண்டுவில் சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி சாவு

கட்டுமான பணியின் போது பழமையான சுவர் இடிந்து தொழிலாளி பலியானார்.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள ஆழந்தழிர்தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமர்(51). கட்டிட தொழி லாளி. இவர் சம்பவத்தன்று ரவி என்பவருடன் சேர்ந்து சோலைதேவன்பட்டியில் உள்ள ராகவன் என்பவரது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த பழமையான சுவர் இடிந்து ராமர் மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய ராமரை அங்கிருந்து தொழிலாளர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராமர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் உடன் பணிபுரிந்து கொண்டிருந்த வேலுச்சாமி (60) என்பவரு க்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடமலை க்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com