என் மலர்
தேனி
- வெளிமாநில தொழிலா ளர்கள் புதியதாக ரேசன் அட்டை வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தேனி மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்.
தேனி:
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் தமிழ்நாட்டில் வசிக்கும் வெளி மாநில தொழிலா ளர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கு மாறு உத்திரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இணைய தளத்தில் பதிவு செய்தும் ரேசன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலா ளர்கள் புதியதாக ரேசன் அட்டை வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட தனிவட்டா ட்சியர் (குடிமைப்பொருள்) / வட்ட வழங்கல் அலுவல ர்களிடம் விண்ணப்பி க்குமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.
பிற மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தம் காரண மாக தேனி மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரேசன் அட்டைகள் வழங்க ப்படும்.
எனவே மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்தும் ரேசன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் புதியதாக குடும்ப அட்டை வேண்டி சம்மந்தப்பட்ட தனிவட்டாட்சியர் (குடிமைப்பொருள்) / வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.
- மன உளைச்சலில் இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி ஜே.கே.பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜேஸ்வரி (வயது 40). இவர்களது மகள் சுகன்யாவை தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
மகன் கார்த்திக்கிற்கு கவுரி என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்க ளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி சம்பவத்தன்று வீட்டு மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் கசியும் நீரை போட்டி போட்டு பெண்கள் குடங்களில் எடுக்கும் நிலைக்கு கண்ட மனூர் மக்கள் தள்ளப்பட்டு ள்ளனர்.
- கண்டமனூர் கிராமத்தில் சுகாதாரமான குடிநீரை தடையற்ற முறையில் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கண்டமனூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு முதல் 3 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட 10க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டி கள் உள்ளன.
இந்த குடிநீர் தேவைக்காக வீரபாண்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 6 லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு காரணங்களை கூறி கண்ட மனூர் ஊராட்சி நிர்வாகம் மூலம் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவ தாகவும், இதனால் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறையால் மாநில நெடுஞ்சாலையில் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் கசியும் நீரை போட்டி போட்டு பெண்கள் குடங்களில் எடுக்கும் நிலைக்கு கண்ட மனூர் மக்கள் தள்ளப்பட்டு ள்ளனர்.
கானாவிலக்கு - வருச நாடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கண்டமனூர் பகுதியில் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் 2 இடங்களில் கசிந்து வரும் சுகாதாரமற்ற நீரை டப்பா க்களில் போட்டி போட்டுக் கொண்டு இறைத்து சல்லடையில் வடிகட்டி குடங்களில் நிரப்பி நாள்தோறும் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
தண்ணீர் கலங்கலாக வந்தாலும் வேறு வழி இல்லை என்று கூறும் மக்கள் இதனையே குடிநீராக தொடர்ந்து குடித்து வருவதாகவும், இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதோடு, பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது டெங்கு, மலேரியா, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரமற்ற குடிநீர்தான் இப்பகுதி மக்களுக்கு குறைந்த அளவு கிடைக்கிறது. எனவே மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்டமனூர் கிராமத்தில் சுகாதாரமான குடிநீரை தடையற்ற முறையில் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கூடுதல் மழையாலும், முல்லைபெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- 71 அடிஉயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 49.57 அடியாக உள்ளது. மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தென்மேற்கு பருவமழையின்போது போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் முதல்போக சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கூடுதல் மழையாலும், முல்லைபெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் 71 அடிஉயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 49.57 அடியாக உள்ளது. அணைக்கு 915 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 1665 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1200 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.60 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. பெரியாறு 20.6, தேக்கடி 0.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- லோயர்கேம்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் ரூ.1295.76 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
- தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளதால் 2 மாதத்திற்குள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலூர்:
மதுரை மாநகராட்சி பகுதிக்கு தினசரி 125 மி.கனஅடி நீர் பெறும் வகையில் தேனி மாவட்டம் லோயர்கேம்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் ரூ.1295.76 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமை நீரேற்றுநிலையம் மற்றும் பெரியாறு குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றன.
25 மீட்டர் நீளம், அகலம் மற்றும் 22 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டு வரும் தலைமை நீரேற்று நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் முல்ைலபெரியாற்றின் குறுக்கே தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.
தடுப்பணையில் இருந்து தலைமை நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் அங்கிருந்து குழாய்மூலம் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டிக்கு எடுத்துச்செல்லப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டத்தில் முக்கிய பணியான தலைமை நீரேற்று நிலைய கட்டுமான பணி பெரும் சவாலாக இருந்தது. ெதாடர் முயற்சி காரணமாக இந்த பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது.
தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளதால் 2 மாதத்திற்குள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் முடிவடையும் என்றனர்.
- கள்ளக்காதலை தட்டிகேட்ட மனைவியை கணவர் மற்றும் கள்ளக்காதலி ஆகியோர் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஷோபனா(42). இவர் வேலூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் தங்கபாண்டியன் மற்றும் குழந்தைகளுடன் தேவாரத்தில் வசித்து வருகிறார். இதனிடையே தங்கபாண்டியனுக்கும் , கேரளமாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சதீஸ் மனைவி ரமா(33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
ஷோபனா வேலை விசயமாக வெளியூரில் இருப்பதால் ரமாவுடன் தங்கபாண்டியன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதுகுறித்து ஷோபனாவுக்கு தெரியவரவே உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தங்கபாண்டியனை வரவழைத்து இனிமேல் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அதன்பிறகும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனை தட்டிகேட்ட ஷோபனாவை தங்கபாண்டியன் மற்றும் ரமா ஆகியோர் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர். படுகாயமடைந்த ஷோபனா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ேசர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குபதிவு செய்து தங்கபாண்டியனை கைது செய்தார்.
- நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 122 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 122 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 2157 கன அடியாக உள்ளது. திறப்பு 1022 கன அடி. இருப்பு 2945 மி.கன அடி.
வைகை அணையின் நீர்மட்டம் 48.98 அடியாக உள்ளது. நீர்வரத்து 509 கன அடி. மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1862 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. அணைக்கு 11 கன அடி நீர் வருகிறது. இருப்பு 405. 22 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 49.43 மி. கன அடியாக உள்ளது.
பெரியாறு 14.2, தேக்கடி 9, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- அவரைச்செடிகளில் பூக்கள் மட்டுமே அதிக அளவு பூத்த நிலையில் காய்கள் சரிவர காய்க்கவில்லை. பெரும்பாலான காய்கள் மஞ்சள் நிறத்தில் அதிகமாக புழு க்கள் கொண்டதாக இருந்தது.
- வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதி விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது பொட்டிபுரம் கிராமம். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேர்வு செய்ய ப்பட்ட இடம் என்பதன் மூலம் உலகளவில் இந்த கிராமம் பிரசித்தி பெற்றது. முற்றிலும் விவசாயத்தைச் சார்ந்தே உள்ள இப்பகுதியில் தற்போது அவரைக்காய் அதிக அளவில் பயிரிட ப்பட்டுள்ளது.
கடந்த முறை நடப்பட்ட அவரை விதைகள் மூலம் உருவாக்கப்பட்ட அவரைச்செடிகளில் பூக்கள் மட்டுமே அதிக அளவு பூத்த நிலையில் காய்கள் சரிவர காய்க்கவில்லை. பெரும்பா லான காய்கள் மஞ்சள் நிறத்தில் அதிகமாக புழு க்கள் கொண்டதாக இருந்தது.
இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை. இங்கு பறிக்கப்படும் காய்கள் தரம் பிரிக்கப்பட்டு தேவாரம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மஞ்சள் பூத்த காய்கள் பறிக்காமல் செடியிலேயே விடப்படுகிறது.
மேலும் நோய் தாக்கம் ஏற்பட்ட காய்கள் விற்பனை யாகாமல் சாலையோரம் கொட்டப்பட்டு மாடுகளுக்கு இறையாக மாறியுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவரைக்காய் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.18 முதல் ரூ.25 வரை மட்டுமே வியாபாரி களால் வாங்கப்படுகிறது.
விளைச்சல் பாதிப்பு குறித்து தேனி மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆர்.டி.ஓ. தலைமையில் ஆய்வுக்குழுவை நேரில் அனுப்பி விசாரணை நடத்தவும், நிவாரணம் பெற்றுத் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்த னர்.
ஆனால் இது வரை விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காத தால் மிகுந்த மனவேதனை யடைந்துள்ளனர். எனவே வேளாண் துறை அதிகாரி கள் இப்பகுதி விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பைக் விவசாயி மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயி. இவர் தனது மனைவியுடன் சொக்கத்தேவன் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மீனாட்சிபுர த்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தனது மனைவி கண் முன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மாமனார் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கண்ட மனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
- கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
கம்பம்:
கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவபிரகாஷ் (வயது31) மற்றும் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் ஜெயச்சந்திரன் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆண்டிபட்டி போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்ட போது ராஜகோபாலன்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சின்னச்சாமி மகன் நாகராஜ் (21) பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் பார்வையாளராக கலந்து கொண்டார்.
- ‘எல்லாருக்கும் எல்லாம்”கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகில் உள்ள கோவில்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் ஷஜீவனா பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கிராம சபை கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பூர்த்தி செய்வதற்கும், ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து மக்களின் முழு ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 'எல்லாருக்கும் எல்லாம்"கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.
இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24 ம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஆற்றிய உரையினை மக்களுடன் இணைந்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.
- தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசாா ரோந்து சென்றனர்.
- அப்போது அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி அருகே அல்லிநகரம் போலீசார் வெங்கலாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற பாண்டி முருகன் (வயது51) என்பவரை கைது செய்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வடபுதுபட்டி பகுதியில் வீட்டின் அருகே மது விற்ற பாண்டி (49) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பு அருகே உள்ள கழிப்பறை பகுதியில் மது விற்ற பிரசாத் (20) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி போலீசார் குமராபுரம் மயான பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கார்த்திக் (27) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடமலைக்குண்டு போலீசார் உப்போடை பாலம் அருகே ரோந்து சென்றபோது மது விற்ற பாண்டியன் (39) என்பவரை கைது செய்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கண்டமனூர் போலீசார் ஜல்லிக்கட்டு பிரிவு சாலையில் ரோந்து சென்றபோது மது விற்ற வேலுச்சாமி (42) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோம்பை ேபாலீசார் பண்ணைபுரம்- பல்லவராயன்பட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் மது விற்ற ஈஸ்வரன் (51) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






