search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட கிராமசபை கூட்டம் அவசியம்-கலெக்டர் ஷஜீவனா பேச்சு
    X

    கிராமசபை கூட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையை பொதுமக்களுடன் அமர்ந்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.

    எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட கிராமசபை கூட்டம் அவசியம்-கலெக்டர் ஷஜீவனா பேச்சு

    • கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் பார்வையாளராக கலந்து கொண்டார்.
    • ‘எல்லாருக்கும் எல்லாம்”கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள கோவில்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் ஷஜீவனா பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிராம சபை கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பூர்த்தி செய்வதற்கும், ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து மக்களின் முழு ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 'எல்லாருக்கும் எல்லாம்"கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

    இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்,

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24 ம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஆற்றிய உரையினை மக்களுடன் இணைந்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.

    Next Story
    ×