50 அடியை எட்டும் வைகை அணை நீர்மட்டம்

மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கூடுதல் மழையாலும், முல்லைபெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.71 அடிஉயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 49.57 அடியாக உள்ளது. மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்பு படம் (வைகை அணை)
கோப்பு படம் (வைகை அணை)
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தென்மேற்கு பருவமழையின்போது போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் முதல்போக சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கூடுதல் மழையாலும், முல்லைபெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் 71 அடிஉயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 49.57 அடியாக உள்ளது. அணைக்கு 915 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 1665 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1200 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.60 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. பெரியாறு 20.6, தேக்கடி 0.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com