search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் ரேசன் அட்டை பெற வாய்ப்பு
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் ரேசன் அட்டை பெற வாய்ப்பு

    • வெளிமாநில தொழிலா ளர்கள் புதியதாக ரேசன் அட்டை வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தேனி மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்.

    தேனி:

    உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் தமிழ்நாட்டில் வசிக்கும் வெளி மாநில தொழிலா ளர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கு மாறு உத்திரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இணைய தளத்தில் பதிவு செய்தும் ரேசன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலா ளர்கள் புதியதாக ரேசன் அட்டை வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட தனிவட்டா ட்சியர் (குடிமைப்பொருள்) / வட்ட வழங்கல் அலுவல ர்களிடம் விண்ணப்பி க்குமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    பிற மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தம் காரண மாக தேனி மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரேசன் அட்டைகள் வழங்க ப்படும்.

    எனவே மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்தும் ரேசன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் புதியதாக குடும்ப அட்டை வேண்டி சம்மந்தப்பட்ட தனிவட்டாட்சியர் (குடிமைப்பொருள்) / வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×