கம்பம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கம்பம்:

கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவபிரகாஷ் (வயது31) மற்றும் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் ஜெயச்சந்திரன் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆண்டிபட்டி போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்ட போது ராஜகோபாலன்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சின்னச்சாமி மகன் நாகராஜ் (21) பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com