என் மலர்tooltip icon

    தேனி

    • போலீசார் கோட்டூர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் தலைமையிலான போலீசார் கோட்டூர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது வீரபாண்டியைச் சேர்ந்த சுபாஷ்குமார் (வயது 21), சின்னமனூரைச் சேர்ந்த முனீஸ்வரன் (19) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் 320 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வயல்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் மனஉளைச்சலில் இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி கவுதமி (வயது27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணசாமி மது குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் பிரச்சினை செய்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கவுதமி விஷம் குடித்து மயங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமியும் விஷம் குடித்துள்ளார். 2 பேரையும் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதமி உயிரிழந்தார். கிருஷ்ணசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி கருப்பாயம்மாள் (56). பால் பண்ணை வைத்து நடத்தி வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த கருப்பாயம்மாள் விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, லோயர்கேம்ப், ஹைவேவிஸ், மேகமலை, இரவங்கலாறு, உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணப்புரம், மல்லிங்கா புரம், ராயப்பன்பட்டி, கோகிலா புரம், காமயகவுண்டன்பட்டி, ஆனைமலையான்பட்டி,

    அணைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின் பகிர்மான செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    • கோவாவில் கடந்த செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
    • தேனியை சேர்ந்த மாணவர்கள் 5 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    தேனி:

    கோவாவில் கடந்த செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் தமிழக அணியின் சார்பாக தேனி அருகே உள்ள ,கொடுவி லார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை மாணவர்கள் அஸ்வின், சர்வேஷ் கோபால், மோகன்தாஸ், மோகித்குமார், வசுநந்தன் ஆகிய வீரர்கள் வயது மற்றும் எடையின் அடி ப்படையில் கலந்து கொண்டு 5 தங்க பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை நிறுவனர் மற்றும் சிலம்ப ஆசான் ஈஸ்வரன் மாண வர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதோடு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வெளி மாநிலங்களில் நடைபெறும் சிலம்பம் போட்டிகளுக்கு அழைத்து சென்று போட்டியில் தங்க பதக்கங்கள் பெறும் அளவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • கிராம பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய ஆணையர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடன் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கிராம பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஆணையர்கள் பதிலளித்தனர். கூட்டத்தில் ஒன்றிய மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
    • பல்வேறு குறைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, விபத்து நிவாரணம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, விவசாயம் மற்றும் போக்குவரத்து துறை தொடர்பாக மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • உச்சத்தில் விற்ற தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.
    • போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை 1கிலோ ரூ.200க்கு மேல் விற்பனையானது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு ரேசன் கடை மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்க நடவடிக்கை எடுத்தது. சில வியாபாரிகள் தக்காளி விற்றே லட்சாதிபதி ஆனார்கள். ஆனால் தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.

    தேனி மாவட்டம் போடி அருகே ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் தக்காளி விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்தனர். ஆனால் வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.உரம், பூச்சி மருந்து பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    இதனால் ரூ.200க்கும் மேல் விற்ற தக்காளி தற்போது யாரும் வாங்க முன்வராத நிலையில் செடியிலேயே அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேனி மாவட்ட ஊர்காவல் படையில் காலி யாக உள்ள பணியிடங்க ளுக்கு ஆண், பெண்கள் வருகிற 11-ந்தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.560வீதம் 5 நாட்களுக்கு ரூ.2800 ஊதியமாக வழங்கப்படும்.

    தேனி:

    தேனி மாவட்ட ஊர்காவல் படையில் காலி யாக உள்ள பணியிடங்க ளுக்கு ஆண், பெண்கள் வருகிற 11-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு பிரவீன் உமேஷ்டோ ங்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது,

    ஊர்காவல் படை பணிக்கு 20 வயது நிறைவடைந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வு அல்லது தோல்வி அடைந்த சமூகசேவையில் ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்க லாம். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்க ப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560வீதம் 5 நாட்களுக்கு ரூ.2800 ஊதியமாக வழங்க ப்படும். தகுதியுள்ளவர்கள் தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஊர்காவல்படை அலுவலக த்தில் இன்று மற்றும் நாளை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சான்றிதழ்களின் நகலுடன் வட்டார தளபதி, மாவட்ட ஊர்காவல்படை அலுவல கம், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முதல்தளம் என்ற முகவரிக்கு வருகிற 11-ந்தேதி க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 7ந் தேதி காலை 6.00 மணிக்கு அரண்மனைபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து நடைபெறவுள்ளது.
    • மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையின் சார்பில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 7ந் தேதி காலை 6.00 மணிக்கு அரண்மனைபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து நடைபெறவுள்ளது.

    இப்போட்டியில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 8 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் 25 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 10 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் போட்டி நடைபெற உள்ளது.

    ஓட்டப்போட்டியில் பங்குபெறும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும்,

    மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும். ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் கொண்டு வருதல் வேண்டும்.

    இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை முதல் பக்கம் நகல் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

    எனவே போட்டியில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயதுச்சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நாளை மாலை 6.00 மணிக்குள் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • நீர்வரத்து 915 கனஅடியாக நேற்று இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 50 அடியை எட்டியது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தென்மேற்குபருவமழை தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையில் தேனி மாவட்டத்தில் போதுமான மழை பெய்யவில்லை. கோடையை போல வறுத்தெடுத்த வெயிலால் பெரும்பாலான அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது.

    இதனால் 71 அடி உயரம் உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்துகொண்டே சென்றது. அணையில் போதிய நீர்இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. வைகைஅணையிலிருந்து மதுரை , சேடபட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் பகுதி குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வைகை அணையில் நீர்வரத்து என்பது பெரும்பாலும் முல்லைபெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்தே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் முல்லைபெரியாறு அணையிலிருந்து 1200 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்வரத்து 915 கனஅடியாக நேற்று இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 50 அடியை எட்டியது.

    இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது. வரத்து 823 கனஅடி, திறப்பு 69 கனஅடி, நீர்இருப்பு 1996 மி.ககனஅடியாக உள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.75 அடி, வரத்து 1104 கனஅடி, திறப்பு 1200 கனஅடி, இருப்பு 2975 மி.கனஅடி.

    1956-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட வைகை அணை 72 உயரமும், 21.2 கி.மீ சுற்றளவும் கொண்டது. அணையில் அதிகபட்சமாக 71 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் 15 அடிக்குமேல் சேரும், சகதியுமாக இருப்பதால் தண்ணீர் தேங்கும் கொள்ளளவு மிகவும் குறைவாக உள்ளது. 67 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை இதுவரை தூர்வாரப்படவில்லை. இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ.200 கோடி மதிப்பில் அணையை தூர்வார திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    இந்தபணி விரைவில் மேற்கொள்ளும்பட்சத்தில் அணையில் கூடுதல் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

    • மூலக்கடை கிராமத்தில் ஸ்ரீவில்லிப்புதூர்-மேகமலை புலிகள் காப்பக மேகமலை கோட்டம் சார்பில் மனித, வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்கு களால் தக்காளி, வாழை, கத்திரி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சேதம் அடைவதாக வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே மூலக்கடை கிராமத்தில் ஸ்ரீவில்லிப்புதூர்-மேகமலை புலிகள் காப்பக மேகமலை கோட்டம் சார்பில் மனித, வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்குக் கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமை தாங்கினார்.

    கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ், மந்திச்சுனை- மூலக்கடை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, வேளாண்மை துறை மற்றும் கால்நடை டாக்டர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில் சிறப்பாறை, மூலக்கடை, மந்திச்சுனை, ஆலந்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் மலைக்கிராம விவசாயிகளுக்கு வனத்து றை சார்பில் ஏற்படுத்த ப்பட்டு வரும் பாதுகாப்புகள் மற்றும் வனப்பகுதியை பாது காப்பதில் விவசாயி களின் பங்கு குறித்து எடுத்துரை க்கப்பட்டது. அதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைத்து அதன் மூலம் மரம் வெட்டுதல், வேட்டை யாடுதல் உள்ளிட்ட வன குற்றங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வனத்துறை யினருக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்கு களால் தக்காளி, வாழை, கத்திரி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சேதம் அடைவ தாக வனத்துறை அதிகாரி யிடம் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    • சமுதாய கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ராமகாரன் தெருவில் சமுதாய கூடம் உள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல்அலுவலர் சிவக்கு மார் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் காமு (வயது 50). இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி. ஒரு ஆடு மற்றும் 2 குட்டிகளை வளர்த்து வருகிறார்.

    அவரது தோட்டத்தில் மேய்ச்சலு க்காக விட்டு வந்த போது ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×