என் மலர்tooltip icon

    தேனி

    • தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
    • அதனை தொடர்ந்து விற்பனை வளாக பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆவின் பொருட்கள் தயார் செய்யும் அறையினை பார்வையிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை திறந்து வைத்து தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பால் வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் நிர்வாக இயக்குநர் வினித் முன்னிலை வகித்தனர்.

    மேலும் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சரவணக்குமார் (பெரியகுளம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். தங்கதமிழ்செல்வன், லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன பாலகத்தில் தேவையான குளிரூட்டும் கருவிகள், பன்னீர் தயாரிக்கும் எந்திரம், பாதாம் பொடி தயாரிக்கும் எந்திரம் உள்ளிட்ட எந்திரங்களும், ஆவின் நெய், வெண்ணெய், பால்கோவா, ஐஸ்கிரீம், நறுமண பால், தயிர், மோர் மற்றும் பால்பவுடர் போன்ற பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தரமானதாகவும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட பாலகத்தின் விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விற்பனை வளாக பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆவின் பொருட்கள் தயார் செய்யும் அறையினை பார்வையிட்டார்.

    தேனி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் திறன் கொண்ட குளிரூட்டும் நிலையத்திற்கு மாவட்டத்திலுள்ள 444 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம், நாள் ஒன்றிற்கு 50,000 லிட்டர் கொள்முதல் செய்து குளிரூட்டப்பட்டு, மதுரை மற்றும் பிற மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு பால் வாகனங்கள் மூலம் தினமும் அனுப்பி வைக்கப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் 43 பயனாளிகளுக்கு பால் கறவை மாட்டுக் கடன் உதவிகளும், ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் 29 பயனாளிகளுக்கு கறவை மாடு பராமரிப்பு கடன் உதவிகளும், ரூ.19.54 லட்சம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தாட்கோ மூலம் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.35,250 மதிப்பிலான தீவன விதைகளுக்கான கடன் உதவிகளும், 218 பயனாளிகளுக்கு ரூ.96.56 லட்சம் மதிப்பீட்டில் பால் தர பரிசோதனை கருவிகளும், சிறுபால் பண்ணை அமைப்பதற்காக ஒரு குழுவிற்கு ரூ.66 7. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், மகளிர் திட்டத்தின் மூலம் 3 குழுக்களுக்கு ரூ.24.50 லட்சம் கடனுதவிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் பால் மாட்டுக்கடனாக 71 பயனாளிகளுக்கு ரூ.42.86 லட்சம் கடனுதவிகளும் என மொத்தம் 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    தேனி மாவட்டத்தில் அதிகப்படியான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகப்படியான பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக நெய் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.20 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். இதன்மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக ஆண்டிபட்டி, வேலப்பர் கோவில், தெப்பம்பட்டி, கோத்தலூத்து, பிச்சம்பட்டி, ஜம்புளிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. வைகை அணைக்கு நீர்வரத்து 674 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 51.44 அடியாக உள்ளது. விரைவில் 52 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.20 அடியாக உள்ளது. 266 கனஅடிநீர் வருகிறது. 600 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.74 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் 0.8, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.2, வைகை அணை 11, வீரபாண்டி 3.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கைலாசபட்டி பகுதியில் தென்கரை போலீசார் ேராந்து சென்றனர்.
    • கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் தென்கரை போலீசார் ேராந்து சென்றனர்.

    அப்போது 3 பேர் பைக்குடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது கஞ்சா விற்பனை செய்வதற்காக பைக்கில் வந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சிவதேசிங்கு (வயது25) மற்றும் கொடைக்கானலை சேர்ந்த பாபு (25), சிவசண்முகம் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • குடும்ப தகராறில் கணவன் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றார்.
    • புகாரின்பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் 6-வது வார்டு அருந்ததியர் ஓடைத்தெரு வை சேர்ந்தவர் உதய குமார்(31). இவரது மனைவி ராஜலட்சுமி(28). உதய குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. தினந்தோறும் குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் அவரது சகோதரிகளை தரக்குறை வான வார்த்தை களால் திட்டி வந்துள்ளார்.

    இதனை ராஜலட்சுமி கண்டிக்கவே அவர்களு க்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி உதயகுமார் கொலை செய்ய முயன்றார். ராஜலட்சுமி சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்றினர்.

    இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.

    • கணவர் இறந்த நிலையில் மகளும் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் தாய் மன விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்தார்.
    • விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பூதிப்புரம் வாழையாத்துப்பட்டியை சேர்ந்த சின்னமுத்து மனைவி மீனா(49). இவர்களுக்கு முருகேஸ்வரி என்ற மகள் இருந்தார்.

    சின்னமுத்து உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் முருகேஸ்வரியை போஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். முருகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தனது கணவன் மற்றும் மகள் அடுத்தடுத்து இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மீனா யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று மீனா தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது.
    • நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப் படுகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி 14707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வாரம் திடீரென பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 120 அடியை கடந்தது.

    இதனால் அணை யிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.35 அடியாக உள்ளது. அணைக்கு 680 கனஅடிநீர் வருகிறது. நேற்று முன்தினம் 1200 கனஅடிநீர் திறக்க ப்பட்ட நிலையில் நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 51.08 அடியாக உள்ளது. 858 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 89.97 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • விவசாயி வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.
    • புகாரின்பேரில் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ரெங்க நாதபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது60). விவசாயி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மகன் சுருளிராஜ் தனது குடும்பத்து டன் சென்னையில் வசித்து வருகிறார்.

    விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் உறவினர்களுக்கு கடன் கொடுத்து வந்துள்ளார். பணத்ைத தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். தோட்ட வேலைக்கு உதவியாக முத்துகாமாட்சி என்பவர் இருந்துள்ளார்.

    சம்பவத்தன்று தோட்ட த்தில் இருந்த ஈஸ்வரி மதியம் சாப்பிட்டு வர முத்துகாமாட்சியிடம் வீட்டு சாவியை கொடுத்துள்ளார். அவர் மீண்டும் ேதாட்ட த்துக்கு வந்தார். பின்னர் இரவு வீட்டுக்கு சென்ற போது வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் வீடு புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி பைக்கை ஒரு கும்பல் பறித்து சென்றனர்.
    • புகாரின்பேரில் போலீசார் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் வட கரையை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது27). இவர் தேவதானப்பட்டி அருகே எழுவனம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து எழுவனம்பட்டி- செங்குளத்துப்பட்டி சாலையில் பன்றி பண்ைண அருகே வந்துகொண்டி ருந்தபோது ஒருவாலிபர் அவரை தடுத்து நிறுத்தினார். மேலும் பைக் சாவியை பறித்துக் கொண்டார்.

    இதனைத் ெதாடர்ந்து மேலும் 3 பேர் அவரை சுற்றி வளைத்து பணம் கேட்டு மிரட்டினர். அதில் ஒருவர் கத்தியை எடுத்து குத்த முயன்றதால் பயந்த சவுந்தரபாண்டியன் பைக்கை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் பைக்கை திருடிச் சென்றனர். தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் கண்ணன், மாதவன் ஆகியோரிடம் இது குறித்து எடுத்து கூறி 3 பேரும் பன்றி பண்ணை பகுதியில் வந்து பார்த்தனர். ஆனால் மிரட்டிய நபர்கள் அங்கு இல்லை. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் மற்றும் கும்பலை தேடி வருகின்ற னர்.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை யின்படி திருநங்கைகளு க்கான குறைகளை நிவர்த்தி செய்திடவும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்த்து வைப்பதற்காக மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்திட உத்தரவிட ப்பட்டது.

    அதன்படி திருநங்கை களுக்கான குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முகாமில் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். வீட்டு மனை, கல்வி கடன், அடையாள அட்டை, சுய தொழில் தொடங்க கடன், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    • குடிமகன்கள் தொல்லையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரம் செட் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக் குட்பட்டதாகும். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதானமாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    சாலையோர ஆக்கிரமி ப்புகளை அகற்றாமல் சாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தோட்டத்திற்கு செல்லும் வழியில் குடிமகன்கள் மது குடித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மிகவும் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அணைக்கரை ப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன், போடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

    • மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது.
    • 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத தால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை யின்போது 142 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் 2-ம் போக பாசனம் முழுமைக்கும் தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 120 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி 121.55 அடி நீர்மட்டம் உள்ளது. மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது. நேற்று 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.

    பெரியாறு அணையிலி ருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 50.59 அடியாக உயர்ந்துள்ளது. 962 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 53.70 அடி யாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல்அலுவலர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
    • தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்ற கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல்அலுவலர் ஆளவந்தார் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடை செய்யபப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு இருந்ததை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளருக்கு ரூ. 1500 அபராதம் விதித்தனர். ஆய்வின்போது இளநிலை உதவியாளர் பாத்திமா, வரித்தண்டலர், பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு செயல்அலுவலர் ஆளவந்தார் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதேபோல்சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் ரோகிணி தலைமையில் பணியாளர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஒட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ×