கூடலூரில் மனைவியின் வாயில் விஷத்தை ஊற்றிய கணவர் கைது

குடும்ப தகராறில் கணவன் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றார்.புகாரின்பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கூடலூர்:

கூடலூர் 6-வது வார்டு அருந்ததியர் ஓடைத்தெரு வை சேர்ந்தவர் உதய குமார்(31). இவரது மனைவி ராஜலட்சுமி(28). உதய குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. தினந்தோறும் குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் அவரது சகோதரிகளை தரக்குறை வான வார்த்தை களால் திட்டி வந்துள்ளார்.

இதனை ராஜலட்சுமி கண்டிக்கவே அவர்களு க்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி உதயகுமார் கொலை செய்ய முயன்றார். ராஜலட்சுமி சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்றினர்.

இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com