தேவாரத்தில் வீடு புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை

விவசாயி வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.புகாரின்பேரில் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ரெங்க நாதபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது60). விவசாயி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மகன் சுருளிராஜ் தனது குடும்பத்து டன் சென்னையில் வசித்து வருகிறார்.

விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் உறவினர்களுக்கு கடன் கொடுத்து வந்துள்ளார். பணத்ைத தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். தோட்ட வேலைக்கு உதவியாக முத்துகாமாட்சி என்பவர் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று தோட்ட த்தில் இருந்த ஈஸ்வரி மதியம் சாப்பிட்டு வர முத்துகாமாட்சியிடம் வீட்டு சாவியை கொடுத்துள்ளார். அவர் மீண்டும் ேதாட்ட த்துக்கு வந்தார். பின்னர் இரவு வீட்டுக்கு சென்ற போது வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் வீடு புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com