சின்னமனூரில் இரட்ைட மாட்டு வண்டி பந்தயம்

சின்னமனூரில் ஏர் உழவன் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக முதலாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. மேகமலை செல்லும் சாலையில் மாடுகள் 7 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
Published on

சின்னமனூர்:

சின்னமனூரில் ஏர் உழவன் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக முதலாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான் சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, தேன் சிட்டு, கரிச்சான் என 6 பிரிவின்கீழ் சுமார் 150க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

சின்னமனூர் மேகமலை செல்லும் சாலையில் மாடுகள் 7 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. முதல்பரிசு 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மற்ற வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றிபெற்ற மாடுகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சின்னமனூர் இரட்டை மாட்டு வண்டி நலச்சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. போட்டியை அ.இ.அ.தி.மு.க. தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலாமணி மார்பன் ெகாடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் சின்னமனூர் நகர் பொறுப்பாளர்பிச்ச ைக்கனி, மாவட்ட பிரதிநிதி மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பந்தயத்தினை சாலையோரம் இருபுறங்களிலும் பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com