என் மலர்
தேனி
- சந்தன மரம் வெட்டி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
- இதுதொடர்பாக தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பொட்டுமடம் பகுதியில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு வேலியோரம் சந்தன மரங்களை வளர்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் வேலைக்கு சேர்ந்தார். தோப்பில் சந்தன மரம் இருப்பதை பார்த்த அவர் அதனை வெட்டி கடத்த முடிவு செய்தார். அதன்படி தனது நண்பர்கள் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த கழுதை பாலு, மேலும் ஒருவருடன் சேர்ந்து அதற்கான திட்டம் போட்டனர்.
அதன்படி 3 பேரும் தென்னந்தோப்பில் இருந்து சந்தன மரங்களை வெட்டி சிறு கட்டைகளாக கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த பெரியகுளம் விவசாயபுரவு காவல் சங்கத்தை சேர்ந்த உதயன் என்பவர் வந்ததை கண்டு கழுதை பாலு மற்றும் அவரது நண்பர் தப்பி ஓடிய நிலையில் பிடிபட்ட மூர்த்தியை பெரியகுளம் போலீசில் ஒப்படைத்தார்.
அவரிடம் இருந்து சந்தன கட்டைகள், கோடாரி, பைக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பெரியகுளம் போலீசார் மூர்த்தியை தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜிடம் ஒப்படைத்த னர்.
வனத்துறையினர் சந்தன மரம் வெட்டிய வழக்கில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. தற்போது மேலும் ஒருவர் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது 49 வீடுகளும், 57 கடைகளும் அகற்றப்பட்டது.
தேனி:
தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் உள்ள தேனி பங்களாமேடு, குயவர்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து அரண்மனைப்புதூர் விலக்கு வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சீத்தராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது தேசிய நெடுஞ்சாலை இளநிலை பொறியாளர் தேவநாதன், தேனி தாசில்தார் சரவணபாபு, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் திருமுருகன், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது 49 வீடுகளும், 57 கடைகளும் அகற்றப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
- வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த சமயத்தில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் கடந்தமாதம் 142 அடி வரை நீர் மட்டம் உயர்ந்தது.
- தற்போது அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் அணையின் நீர் மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் இந்த மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த சமயத்தில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் கடந்தமாதம் 142 அடி வரை நீர் மட்டம் உயர்ந்தது. அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்து முற்றிலும் நின்று விட்டது. அதே வேளையில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டது.
இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது. தற்போது அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் அணையின் நீர் மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 133.80 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் 633 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3380 மில்லியன் கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஜூன் மாதம் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர் மட்டம் 130 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் தற்போது நீர் மட்டம் சரிந்துள்ளதால் அதற்குள் கோடை மழை பெய்து நீர் மட்டம் உயருமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வைகை அணையின் நீர் மட்டம் 55.54 அடியாக உள்ளது. வரத்து 502 கன அடி. திறப்பு 769 கன அடி. இருப்பு 2707 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 46.36 அடி. வரத்து 38 கன அடி. திறப்பு 75 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.42 அடி. திறப்பு 25 கன அடி.
- பூஜை செய்து பரிகாரம் நடத்தினால் கணவருடன் சேர்ந்து வாழலாம் எனக் கூறி அதற்காக ரூ.20,000 பணம் வேண்டும் என ஜோதிடர் கூறினார்.
- பூஜை என்ற பெயரில் பலாத்காரம் செய்ய முயன்ற ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகார் அளித்துள்ளார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மஞ்சுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காமாட்சி (வயது 22). இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது பெற்றோர் இறந்து விட்ட நிலையில் கணவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறேன். கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும்என பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தேன். இந்நிலையில் எனது பிரச்சினைகளை தேனியைச் சேர்ந்த கண்மணி என்பவரிடம் கூறினேன். அவர் போடி அருகே பொட்டிப்புரத்தில் உள்ள செல்வராஜ் என்ற ஜோதிடரிடம் என்னை அழைத்துச் சென்றார். பின்னர் எனக்கு பூஜை செய்து பரிகாரம் நடத்தினால் கணவருடன் சேர்ந்து வாழலாம் எனக் கூறி அதற்காக ரூ.20,000 பணம் வேண்டும் என்றார்.
இதற்கு நானும் சம்மதித்து ரூ.20,000 பணம் கொடுத்தேன். அதன் பிறகு பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி என்னை சுவாமி படங்கள் நிறைந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று திருநீறு பூசி மந்திரங்களை சொல்லியபடி என் ஆடைகளை அகற்றச் செய்தார்.
பின்னர் அவரது செல்போனில் என்னை படம் பிடித்தார். அதன் பிறகு என்னை பலாத்காரம் செய்ய முயன்றபோதுதான் தவறான எண்ணத்தில் ஜோதிடர் என்னை நெருங்கியுள்ளார் என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டேன். இது குறித்து போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பூஜை என்ற பெயரில் என்னை பலாத்காரம் செய்ய முயன்ற ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கொடுத்த ரூ.20,000 ஆயிரம் பணத்தையும் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் வீட்டுக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.
- வீட்டில் பெண்களை வைத்து விபாசாரம் நடத்தியது உறுதியானது.
பெரியகுளம்:
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சுபிதா (வயது33). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமி புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தார்.
அதன்பிறகு அந்த வீட்டுக்கு அடிக்கடி பெண்கள் வந்து சென்றுள்ளனர். மேலும் வாலிபர்களும் வந்து சென்றதால் அவர்கள் நடவடிக்கையில் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு அவர்கள் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் அவரது வீட்டுக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது வீட்டில் பெண்களை வைத்து விபாசாரம் நடத்தியது உறுதியானது. இதனையடுத்து போலீசார் சுபிதா, சேதுமூர்த்தி (23), ராமமூர்த்தி (29), விஷ்ணு (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களை பெரியகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வீட்டில் இருந்த மேலும் ஒரு பெண்ணை அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
- சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார்
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்
ஆண்டிபட்டி:
திருப்பூரை சேர்ந்தவர் மைக்கேல்ராசு (வயது60). இவர் மதுபோதைக்கு அடிமையானதால் தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார். இது குறித்து அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மைக்கேல்ராசை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ைமக்கேல்ராசு எற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வைகை அணையில் தண்ணீர் தேக்க முடிவு செய்யப்பட்டது.
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 124.40 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 71 அடி உயரம் கொண்ட அணையில் பருவமழையின்போது முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டது. அதனைதொடர்ந்து மழைப்பொழிவு இல்லாததாலும், கூடுதல் தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
இந்நிலையில் கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வைகை அணையில் தண்ணீர் தேக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி குடிநீருக்கு மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 55.81 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 531 கனஅடிநீர் வருகிறது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 124.40 அடியாக உள்ளது. 102 கனஅடிநீர் வருகிறது. 756 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.75 அடியாக உள்ளது. 37 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- வாலிப்பாறை பகுதியில் இருந்து கருங்காலி மரக்க ட்டைகள் கடத்தப்படுவதாக வருசநாடு வனத்துறையி னருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 23 கருங்காலி மரக்கட்டைகளை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே வாலிப்பாறை பகுதியில் இருந்து கருங்காலி மரக்க ட்டைகள் கடத்தப்படுவதாக வருசநாடு வனத்துறையி னருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வனச்சரகர் கண்ணன் தலைமையில் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாலிப்பாறையில் இருந்து தும்மக்குண்டு பகுதிக்கு வேகமாக மினி வேன் வந்தது. அதனைத் நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது வேனில் 23 கருங்காலி மரக்கட்டைகள் கடத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து டிரைவர் அரசு (வயது38), வனராஜ் (50) ஆகிய 2 பேரை கைது செய்து கருங்காலி மரக்கட்டைகள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர்.
- தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
- தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2010 வழக்குகளில் ரூ.4,14,05,240-க்கு தீர்வு காணப்பட்டது.
தேனி:
நாடு முழுவதும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக்அதாலத் நடைபெற்றது. தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திலகம் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, நீதித்துறை நடுவர் லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி ரமேஷ், வக்கீல்கள் காண்டீபன், பாலாஜி, பிரபாகர், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளத்தில் சார்பு நீதிபதி மாரியப்பன்,நீதித்துறை நடுவர் சர்மிளா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், நீதித்துறை நடுவர்கள் ராமநாதன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
போடியில் நீதித்துறை நடுவர் வேலுமயில் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் வங்கிகளின் வாரக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2010 வழக்குகளில் ரூ.4,14,05,240-க்கு தீர்வு காணப்பட்டது.
- புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் அருகில் உள்ள ஏ.வாடிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் கயல்விழி (வயது23) என்பவ ருக்கும் முத்துப்பாண்டி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது கணவர் சுயஉதவிக்குழுவுக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த கயல்விழி தனக்கு திருமணத்தில் சந்தோசம் இல்லை என்றும், கவலையாக உள்ளது எனவும் கூறி வந்துள்ளார்.
அதன் பிறகு தனது அறைக்கு சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ேதவாரம் அருகில் உள்ள சிந்தலைச்சேரியை சேர்ந்த கார்த்திக் மனைவி ரூபினி (22). கார்த்திக் சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று வேளாங்கண்ணிக்கு வாடகைக்கு சென்று விட்டார். அப்போது ரூபினி தனக்கு உடல் நிலை சரியில்லை என தெரிவிக்க கணவருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்க வில்லை.
இதனால் மனமுடைந்த ரூபினி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துஅவரது தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் மதிவாணன் தலைமையில் மாவட்ட கலெக்டர்ஷஜீவனா முன்னிலையில் ஈராண்டு தணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- சில்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் குடிநீர், மின்வசதி, பொது கழிப்பறை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர்மதிவாணன் தலைமையில் மாவட்ட கலெக்டர்ஷஜீவனா முன்னிலையில் ஈராண்டு தணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பொது மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, முதல்வரின் முகவரித்துறை, வனத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் சார்பில் 2018-2019 மற்றும் 2020-2021 ஆகிய நிதியாண்டுகளில் அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள், அதற்கான செலவினங்கள், அதன் பயன்கள், தற்போதைய நிலை குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் கலெக்டர் முன்னிலையில் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்து றையின் சார்பில் 1 நபருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000- வீதம் ரூ.30,000 மதிப்பிலான தையல் எந்திரங்களையும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, தேனி அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியின் பணியாளர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, தங்கும் அறை, சமயலறை, குளியலறை, கழப்பறை, குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையிலுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அதற்கான பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பெரியகுளம் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் தாய் செடி நடவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி, மண்புழு கூடம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அலகு, சாக்லேட் உற்பத்தி அலகு, பழ மற்றும் காய்கறிகள் பதனீட்டு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் குடிநீர், மின்வசதி, பொது கழிப்பறை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
- கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ெஜனரேட்டர், பேண்ட் சட்டைகள், செண்டு பாட்டில்கள், பர்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் திருடு போயிருந்தன.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் போடி பிரிவு அருகே தனியார் ஜவுளிக்கடை உள்ளது. ஆண்டிபட்டியை சேர்ந்த அஜித் (வயது26) என்பவர் நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ெஜனரேட்டர், பேண்ட் சட்டைகள், செண்டு பாட்டில்கள், பர்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் திருடு போயிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் தனது மோட்டார் சைக்கிளை பழைய பஸ் நிலையம் எதிேர நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அதை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து தேனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில்போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.






