தேனி அருகே ஜவுளிக்கடையை உடைத்து துணிகர கொள்ளை

கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ெஜனரேட்டர், பேண்ட் சட்டைகள், செண்டு பாட்டில்கள், பர்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் திருடு போயிருந்தன. போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் போடி பிரிவு அருகே தனியார் ஜவுளிக்கடை உள்ளது. ஆண்டிபட்டியை சேர்ந்த அஜித் (வயது26) என்பவர் நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ெஜனரேட்டர், பேண்ட் சட்டைகள், செண்டு பாட்டில்கள், பர்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் திருடு போயிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் தனது மோட்டார் சைக்கிளை பழைய பஸ் நிலையம் எதிேர நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அதை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து தேனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில்போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com