என் மலர்
நீங்கள் தேடியது "ஈராண்டு வளர்ச்சிதிட்ட பணிகள்"
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் மதிவாணன் தலைமையில் மாவட்ட கலெக்டர்ஷஜீவனா முன்னிலையில் ஈராண்டு தணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- சில்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் குடிநீர், மின்வசதி, பொது கழிப்பறை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர்மதிவாணன் தலைமையில் மாவட்ட கலெக்டர்ஷஜீவனா முன்னிலையில் ஈராண்டு தணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பொது மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, முதல்வரின் முகவரித்துறை, வனத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் சார்பில் 2018-2019 மற்றும் 2020-2021 ஆகிய நிதியாண்டுகளில் அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள், அதற்கான செலவினங்கள், அதன் பயன்கள், தற்போதைய நிலை குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் கலெக்டர் முன்னிலையில் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்து றையின் சார்பில் 1 நபருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000- வீதம் ரூ.30,000 மதிப்பிலான தையல் எந்திரங்களையும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, தேனி அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியின் பணியாளர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, தங்கும் அறை, சமயலறை, குளியலறை, கழப்பறை, குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையிலுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அதற்கான பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பெரியகுளம் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் தாய் செடி நடவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி, மண்புழு கூடம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அலகு, சாக்லேட் உற்பத்தி அலகு, பழ மற்றும் காய்கறிகள் பதனீட்டு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் குடிநீர், மின்வசதி, பொது கழிப்பறை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.






