என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே வீட்டில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 4 பேர் கைது
    X

    பெரியகுளம் அருகே வீட்டில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 4 பேர் கைது

    • இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் வீட்டுக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.
    • வீட்டில் பெண்களை வைத்து விபாசாரம் நடத்தியது உறுதியானது.

    பெரியகுளம்:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சுபிதா (வயது33). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமி புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தார்.

    அதன்பிறகு அந்த வீட்டுக்கு அடிக்கடி பெண்கள் வந்து சென்றுள்ளனர். மேலும் வாலிபர்களும் வந்து சென்றதால் அவர்கள் நடவடிக்கையில் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    எனவே இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு அவர்கள் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் அவரது வீட்டுக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது வீட்டில் பெண்களை வைத்து விபாசாரம் நடத்தியது உறுதியானது. இதனையடுத்து போலீசார் சுபிதா, சேதுமூர்த்தி (23), ராமமூர்த்தி (29), விஷ்ணு (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களை பெரியகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வீட்டில் இருந்த மேலும் ஒரு பெண்ணை அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×