என் மலர்tooltip icon

    தேனி

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக தற்போது தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
    • விலை குறைவால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. இருப்பினும் விலை மேலும் குறையும் பட்சத்தில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக தற்போது தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. அதன் காரணமாக தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை 1 தேங்காய் 11 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 8 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இருப்பினும் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால் விலை குறைவால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. இருப்பினும் விலை மேலும் குறையும் பட்சத்தில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேங்காய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே தென்னை விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    • தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
    • கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர்.

    இதில் பாண்டி உயிரிழந்தார். இது குறித்து பாண்டியின் மகள் மலர்மணி அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியம், மணி, விஜயபாண்டி, பிரேமா ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் பாண்டியை கொலை செய்த மணி, விஜயபாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் பாக்கியம், பிரேமா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.

    • இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக தனித்தனியாக பிரித்து அவர்களுக்கென சிறப்பு பயிற்சிகளுடன் கூடிய பாடம் கற்பிக்கப்படும்.
    • பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றி அடையும் வகையிலும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் அனைத்து தேர்விற்கும் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.

    தேனி:

    தேனி மாவட்டம், தேக்கம்பட்டி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிமுக கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    இந்த கல்வியாண்டில், மாதிரி பள்ளிகள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பிற்காக தொடங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தேனி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக தனித்தனியாக பிரித்து அவர்களுக்கென சிறப்பு பயிற்சிகளுடன் கூடிய பாடம் கற்பிக்கப்படும்.

    பாடங்களை மனப்பாட முறையில் கற்காமல் அறிவியல் பூர்வமாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுலபமாகவும் மாணவர்கள் அறிந்து புரிந்து படிக்கும் வகையில் இங்கு பாடத்திட்டங்கள் நடத்தப்படும். பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றி அடையும் வகையிலும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் அனைத்து தேர்விற்கும் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.

    தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை சிறப்பு தேர்வுகளில் பங்கு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல உயர்கல்வி பயிலாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை பெற்றோர்களுடன் வரவழைத்து உரிய ஆலோசனைகள் வழங்கி மாணவர்களுக்கு விருப்பமான கல்வி பயில்வதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

    தேசிய மற்றும் உலக அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு சென்று நம் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாக இம்மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த சிறப்பு அரசு பள்ளிகளில் 11-ஆம் வகுப்பிற்கு 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், உயிரியல் என பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் சார்ந்த பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு, விடுதி உட்பட அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுத்து கல்வி கற்பிக்கப்படும். பெற்றோர்கள் மாணவர்களுக்கு இந்த நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    • பா.ஜ.க நிர்வாகியின் பைக்கை மர்மநபர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் பாரதியார்நகர் தெற்கு 4-வது தெருவை சேர்ந்தவர் வித்யாபதி (வயது30). இவர் தனியார் வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளராகவும் உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி சென்றார். சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது பைக் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வித்யாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருந்தபோதும் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் பைக்கை தீ வைத்து எரித்தி ருக்கலாம் என சந்தேகிக்க ப்படுகிறது. அதிர்ஷ்ட வசமாக அப்பகுதியில் குழந்தைகள், பெரியவர்கள் செல்லவில்லை. மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தவிர்க்கப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை. எனவே இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஷேர் ஆட்டோவில் 12 பெண்களை ஏற்றிக் கொண்டு வேப்பம்பட்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை நோக்கி சென்றனர்.
    • விபத்தில் பெண் பலியானார். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரைச் சேர்ந்த வர் நரசிங்கபெருமாள் என்ற ரவி (வயது 40). சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இன்று காலை தனது ஆட்டோவில் வேலைக்கு செல்லும் 12 பெண்களை ஏற்றிக் கொண்டு சென்றார். வேப்பம்பட்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவி ழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர்.

    ஆட்டோவில் இருந்த டிரைவர் ரவியின் மனைவி ஷோபனா (39) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சின்ன மனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஆசாரி மார் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகள் பரமே ஸ்வரி (வயது 18).

    தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மத்திய அரசின் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமான ஜல் சக்தி பைப் லைன் அமை க்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் மத்திய அரசின் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமான ஜல் சக்தி பைப் லைன் அமை க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கட மலைக்குண்டு, மயிலாடு ம்பாறை ஒன்றியத்துக்கு ட்பட்ட கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், மயிலாடு ம்பாறை, வருசநாடு, முருக்கோடை, தும்ம க்குண்டு, குமணன்தொழு உள்ளிட்ட 18 ஊராட்சி களிலும் பைப் லைன் அமைக்கப்பட்டது.

    ஆனால் அந்த ஊராட்சிகளில் மீண்டும் சாலை அமைக்காமல் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாண வர்கள் விபத்தில் சிக்குவ தோடு இரவு நேரங்களில் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன.

    இத்திட்டத்தின் கீழ் சாலைகள் எப்படி இருந்ததோ அதே போல் பைப் லைன் அமைக்கப்பட்ட பிறகு சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் சில ஊராட்சி களில் சாலை அமைத்ததாக கூறி ஊராட்சி நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே கடமலை, மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்கு இல்லாததால் இருள் அடைந்து காணப்படுகிறது.
    • இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை கள்ள ச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் எப்துபோதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்கு இல்லாததால் இருள் அடைந்து காணப்படுகிறது.

    இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள உறவினர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை கள்ள ச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகிறது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கஞ்சா, மது விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 20 நாட்களாக பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் இயங்காத தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • அடிக்கடி ஏற்படும் இந்த புகாருக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர்அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ஹைவே விஸ் பேரூராட்சி.

    இந்த பேரூராட்சிக்கு ட்பட்டு மேகமலை, மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவை தேனி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.

    இங்கு 6500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களாக பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் இயங்காத தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் சிக்னல் கிடைக்காமல் அவசர தேவையான ஆம்புலன்ஸ்சை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மலை கிரா மங்களில் வெளியு லகத்தின் தொடர்பு இல்லா மல் துண்டிக்க ப்பட்டது போல் பொதுமக்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் பிரச்சினை சீரமைக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் இந்த புகாருக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் தியேட்டரில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி திரையரங்கம் இயங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் தியேட்டரில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு அரசு விதித்து ள்ள விதிமுறை களை முறையாக பின்பற்றி திரையரங்கிற்கான உரிமை புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும், அதன் உரிமை மற்றும் சான்றிதழ்கள் முறையாக புதுப்பிக்கப்பட்டு ள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் திரையரங்கி ற்கான மின்சார பராமரிப்பு முறைகள், தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள், தீயணைப்பு கருவிகளின் நிலை, அவசர வழிகள், முதல் உதவி சாதனங்கள் போன்ற அவசர கால பயன்பாட்டு உபகரண ங்களின் நிலை மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகள், உணவு பாதுகாப்பு துறை யின் சார்பில் வழங்கப்பட்டு ள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவு தயார் செய்யப்படுகிறதா, திரையர ங்கிற்கு வரும் பொது மக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு மேற்கொ ண்டார்.

    செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வழங்கப்பட்டு வரும் தமிழக அரசின் சாதனை விளக்க விளம்பர குறும்படங்கள் முறையாக திரையிடப்படு கிறதா என்றும் அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி திரையரங்கம் இயங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    • செல்போன் தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலையாளி ஒண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (வயது 24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வினோத்குமாரின் நண்பரான யுவராஜாவின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி என்பவர் பறித்து சென்று விட்டார்.

    நேற்று இரவு யுவராஜூடன் சென்று சின்னமனூர் வாரச்சந்தை அருகே மதுபோதையில் இருந்த ஒண்டியிடம் தனது நண்பரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த யுவராஜாவை ஒண்டியின் நண்பர்கள் தடுத்துள்ளனர்.

    பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இன்று காலை வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுப்பிரமணி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    செல்போன் தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொலையாளி ஒண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள போடிதாசன்பட்டி அனுப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 68). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் வலுக்கட்டாயமாக உறவுக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினாள்.

    சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×