என் மலர்
நீங்கள் தேடியது "ஜல் சக்தி பைப் லைன்"
- மத்திய அரசின் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமான ஜல் சக்தி பைப் லைன் அமை க்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் மத்திய அரசின் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமான ஜல் சக்தி பைப் லைன் அமை க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கட மலைக்குண்டு, மயிலாடு ம்பாறை ஒன்றியத்துக்கு ட்பட்ட கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், மயிலாடு ம்பாறை, வருசநாடு, முருக்கோடை, தும்ம க்குண்டு, குமணன்தொழு உள்ளிட்ட 18 ஊராட்சி களிலும் பைப் லைன் அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த ஊராட்சிகளில் மீண்டும் சாலை அமைக்காமல் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாண வர்கள் விபத்தில் சிக்குவ தோடு இரவு நேரங்களில் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் சாலைகள் எப்படி இருந்ததோ அதே போல் பைப் லைன் அமைக்கப்பட்ட பிறகு சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சில ஊராட்சி களில் சாலை அமைத்ததாக கூறி ஊராட்சி நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே கடமலை, மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






