என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
    X

    ஏற்றுமதிக்கு தயாராக உள்ள தேங்காய்களை படத்தில் காணலாம்.

    தேனி மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக தற்போது தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
    • விலை குறைவால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. இருப்பினும் விலை மேலும் குறையும் பட்சத்தில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக தற்போது தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. அதன் காரணமாக தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை 1 தேங்காய் 11 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 8 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இருப்பினும் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால் விலை குறைவால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. இருப்பினும் விலை மேலும் குறையும் பட்சத்தில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேங்காய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே தென்னை விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×