என் மலர்tooltip icon

    தேனி

    • பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.
    • சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முக சுந்தரபுரம் ஊராட்சியில் கரிசல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்று க்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.

    இதனால் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    இது சம்பந்தமாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கரிசல் பட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடத்தை உடனடியாக பராமரிப்பு செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து சமுதாய கூடத்தில் இயங்கும் பள்ளிக்கூடத்தை சொந்த கட்டிடத்திற்கு உடனடியாக மாற்றித்தரும்படி மாணவ ர்களின் பெற்றோர்களும் கரிசல்பட்டி பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனியார் மில்லில் வேலை பார்ப்பவர் மற்றும் தனியார் கல்லூரி மாணவி மாயமாகி உள்ளனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (21). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ராஜலட்சுமி குறித்து விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் கலையரசி (18). இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று விழாவிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது.
    • வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. கேரள மாநிலத்தில் கனமழை பெய்தபோதும் முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்து அணைப்பகுதியில் மழை பெய்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 120 அடியை எட்டியது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.90 அடியாக உள்ளது. 301 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது. வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 29.04அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை , சின்னமனூர்-சின்ன ஓவுலாபுரம் சாலையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • எவ்வித இடையூறுமின்றி பணிகள் நடைபெறுவதை கண்காணித்து தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உத்தமபாளையம் உட்கோட்டப் பகுதிகளில் ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஓடைப்பட்டி முதல் தென்பழனி வரை ரூ.4 கோடி லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தி தார்சாலை அமைக்கும் பணிகள், மூர்த்திநாயக்கன்பட்டி-ஆனைமலையான்பட்டி சாலையில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை , சின்னமனூர்-சின்ன ஓவுலாபுரம் சாலையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உத்தமபாளையம்-போடேந்திரபுரம் சந்திப்பு பகுதியை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் பணிகளையும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கம்பம் நகர பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்ல வசதியாக சாலை மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டார்.

    முன்னதாக அடிக்கடி விபத்து ஏற்படும் தேனி-போடிநாயக்கனூர் 4 வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சந்திப்பு பகுதியினை மேம்படுத்துவதற்காக நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்குப்பின் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அவர்களுக்கு வழங்கிய ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களிலும், விழா நாட்களிலும், பிற முக்கிய நாட்களிலும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பணிகள் நடைபெறுவதை கண்காணித்து தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

    • நகராட்சிக்கான குடிநீர் திட்டப்பணிகள், முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குநர் , மதுரை மண்டல தலைமை பொறியாளர் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே வைகை அணை கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள தலைமை நீரேற்றும் நிலையம் மற்றும் குருவியம்மாள்புரம் அருகில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் வைகை அணை நீரினை ஆதாரமாக கொண்டு ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி- தேனி ஆகிய ஊராட்சி ஒன்றிய ங்களிலுள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள், அதன் நிலை மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கள பொறியாளர்கள் மற்றும் துறை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள விதிமுறை களை முறையாக பின்பற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பணி களை விரைந்து முடிக்க அலு வலர்களுக்கு அறிவு ரைகளை வழங்கினார்.

    மேலும் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கான குடிநீர் திட்டப்பணிகள், முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இவ்வாய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குநர் வேல்முருகன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் நடராஜன் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • டிப்ளமோ படித்து முடித்த தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என வேதனையில் இருந்துள்ளார்.
    • இதனால் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன்(27). இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரதி(21) என்பவருடன் திருமணம் நடந்தது. டிப்ளமோ படித்து முடித்த மணிகண்டன் தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என வேதனையில் இருந்துள்ளார்.

    இதனால் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைதொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மீண்டும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜோதிராஜ். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு வழக்கில் சேதுபதி(30) என்பவருக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சேதுபதி சம்பவத்தன்று ஜோதிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
    • படுகாயமடைந்த இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள தப்புக்குண்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு வழக்கில் சேதுபதி(30) என்பவருக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சேதுபதி சம்பவத்தன்று ஜோதிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அவரது நண்பர் சின்னராஜூக்கும் கொலை மிரட்டல் விடுத்து தாக்கினார். படுகாயமடைந்த இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியின் 10 பவுன் நகைகளை அடகு வைத்து ஆட்டோ வாங்கினார்.
    • சீதாலட்சுமிக்கு குழந்தை இல்லை என்பதால் அதனை காரணம் காட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சீதாலட்சுமி(34). இவருக்கும் அழகுமலை என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    அழகுமலைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் மனைவியின் 10 பவுன் நகைகளை அடகு வைத்து ஆட்டோ வாங்கினார். சீதாலட்சுமிக்கு குழந்தை இல்லை என்பதால் அதனை காரணம் காட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும் வீட்டைவிட்டு செல்லுமாறு அவரை விரட்டியுள்ளனர். இது குறித்து சீதாலட்சுமி தேனி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தர வின்பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீ சார்வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • பேரூராட்சி அலுவலர்கள், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் கலந்து கொண்டு பூமிபூஜையுடன், அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், பேரூராட்சிதுணைத் தலைவர் ராதாராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்குமார், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் மலர்கொடி, பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், நேசம் தொண்டு நிறுவனர் முருகன், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    • சம்பவத்தன்று கோவிலில் பூக்குழி திருவிழா நடை பெற்றது. அப்போது கோவில் பூசாரியான மாரி யப்பன் தீயில் இறங்கினார்.
    • இதில் பூக்குழியில் விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    தேனி:

    தேனி அல்லிநகரம் பகுதியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் பூசாரியாக மாரியப்பன்(67) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலில் பூக்குழி திருவிழா நடை பெற்றது. அப்போது கோவில் பூசாரியான மாரி யப்பன் தீயில் இறங்கினார்.

    பூக்குழி அருகே நின்று கொண்டிருந்த உதயசிங் மற்றும் விழாக்குழுவினர் கூட்ட நெரிசலில் மாரியப்பனை தள்ளினர். இதில் பூக்குழியில் விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார். அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவில் தாமதமாக தொடங்கியதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
    • மழை படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து குறைந்தது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாமதமாக தொடங்கியதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் அணையின் நீர்மட்டம் 115 அடியில் இருந்து 120 அடியாக கிடுகிடுவென உயர்ந்தது.

    இதனால் முல்லைபெரியாறு அணை நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதன்பிறகு மழை படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து குறைந்தது.

    நீர்மட்டம்

    இன்றுகாலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. வரத்து 301 கனஅடி, திறப்பு 400 கனஅடி, இருப்பு 2619 மி.கனஅடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடி, வரத்து 36 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 2005 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 79.31 அடியாகவும் உள்ளது.

    • விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வித்திருநாள் நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் தேனி அரசு மருத்துவமனை மற்றும் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற ரத்த தானம் முகாமை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியத்தை பற்றி மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்து, ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த ரத்ததானம் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நாள் நடைபெற்ற ரத்ததான முகாமில் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 300 பேர் ரத்ததானம் செய்தனர்.

    இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், துணை முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×