என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் படுகாயம்"

    • ரோட்டை கடக்க முயன்ற போது விபத்து
    • ேபாலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 70).

    இவர் கடந்த 26-ந்தேதி அவ்வூர் வழியாக செல்லும் மெயின்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது வேலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக உறவினர் தனசேகர் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விரட்டிச் சென்ற யானை அவரை இடித்து தள்ளிவிட்டு சென்றுள்ளது.
    • யானை இடித்ததில் முதியவர் 7 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 72) விவசாயி.

    இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் இரவில் தங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று தனது குடிசையில் படுத்து உறங்கி உள்ளார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை இவரது விளைநிலத்தில் ஒற்றைக் காட்டு யானை நுழைந்துள்ளது. அதனை கண்டு பதறி ஓடி உள்ளார். விரட்டிச் சென்ற யானை அவரை இடித்து தள்ளிவிட்டு சென்றுள்ளது.

    யானை இடித்ததில் முதியவர் 7 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதன் காரணமாக யணை அவரை மிதித்துக் கொள்ளாமல் சென்று உள்ளது.

    பள்ளத்தில் விழுந்ததால் உயிர் தப்பினார். இருப்பினும் அவரது கை முறிந்தது. மேலும் தோல்பட்டை, கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

    விளைநிலங்களுக்குள் யானை புகுவதும், அங்குள்ள விவசாயிகளை தாக்குவதும் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்கதையாக உள்ளது. 

    • சம்பவத்தன்று கோவிலில் பூக்குழி திருவிழா நடை பெற்றது. அப்போது கோவில் பூசாரியான மாரி யப்பன் தீயில் இறங்கினார்.
    • இதில் பூக்குழியில் விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    தேனி:

    தேனி அல்லிநகரம் பகுதியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் பூசாரியாக மாரியப்பன்(67) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலில் பூக்குழி திருவிழா நடை பெற்றது. அப்போது கோவில் பூசாரியான மாரி யப்பன் தீயில் இறங்கினார்.

    பூக்குழி அருகே நின்று கொண்டிருந்த உதயசிங் மற்றும் விழாக்குழுவினர் கூட்ட நெரிசலில் மாரியப்பனை தள்ளினர். இதில் பூக்குழியில் விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார். அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

    பயணிகள் இறங்கியதும் ரெயில் மெதுவாக புறப்பட்டு சென்றது. அப்போது சுமார் முதியவர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவரது இடதுகால் ரெயில் பெட்டி மற்றும் பிளாட்பார கட்டிடத்திற்கு இடையே சிக்கிக்கொண்டது.

    ரெயில் நிர்க்காமல் சென்றதில் அவரது கால் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தகவல் அடைந்த காட்பாடி போலீசார் விரைந்து சென்று, முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ராஜம் தியேட்டர் அருகே உள்ள ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு ரோட்டை கடந்து செல்ல வேண்டி ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    இது குறித்த புகாரில் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஷேர் ஆட்டோ டிரைவர் பாபு என்பவரை கைது செய்தனர்.

    ×