யானை தாக்கி முதியவர் படுகாயம்

விரட்டிச் சென்ற யானை அவரை இடித்து தள்ளிவிட்டு சென்றுள்ளது.யானை இடித்ததில் முதியவர் 7 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெரியண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம்.
யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெரியண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம்.
Published on

ஏரியூர்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 72) விவசாயி.

இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் இரவில் தங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று தனது குடிசையில் படுத்து உறங்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை இவரது விளைநிலத்தில் ஒற்றைக் காட்டு யானை நுழைந்துள்ளது. அதனை கண்டு பதறி ஓடி உள்ளார். விரட்டிச் சென்ற யானை அவரை இடித்து தள்ளிவிட்டு சென்றுள்ளது.

யானை இடித்ததில் முதியவர் 7 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதன் காரணமாக யணை அவரை மிதித்துக் கொள்ளாமல் சென்று உள்ளது.

பள்ளத்தில் விழுந்ததால் உயிர் தப்பினார். இருப்பினும் அவரது கை முறிந்தது. மேலும் தோல்பட்டை, கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

விளைநிலங்களுக்குள் யானை புகுவதும், அங்குள்ள விவசாயிகளை தாக்குவதும் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்கதையாக உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com