என் மலர்
நீங்கள் தேடியது "geriatric injury"
- குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
- அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ராஜம் தியேட்டர் அருகே உள்ள ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு ரோட்டை கடந்து செல்ல வேண்டி ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரில் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஷேர் ஆட்டோ டிரைவர் பாபு என்பவரை கைது செய்தனர்.






