என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
தேனி அருகே பூக்குழியில் தவறிவிழுந்த முதியவர் படுகாயம்
- சம்பவத்தன்று கோவிலில் பூக்குழி திருவிழா நடை பெற்றது. அப்போது கோவில் பூசாரியான மாரி யப்பன் தீயில் இறங்கினார்.
- இதில் பூக்குழியில் விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தேனி:
தேனி அல்லிநகரம் பகுதியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் பூசாரியாக மாரியப்பன்(67) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலில் பூக்குழி திருவிழா நடை பெற்றது. அப்போது கோவில் பூசாரியான மாரி யப்பன் தீயில் இறங்கினார்.
பூக்குழி அருகே நின்று கொண்டிருந்த உதயசிங் மற்றும் விழாக்குழுவினர் கூட்ட நெரிசலில் மாரியப்பனை தள்ளினர். இதில் பூக்குழியில் விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார். அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






