என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
தென்கரை பேரூராட்சியில் குடிநீர்திட்ட பணி அடிக்கல் நாட்டு விழா
- தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- பேரூராட்சி அலுவலர்கள், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் கலந்து கொண்டு பூமிபூஜையுடன், அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், பேரூராட்சிதுணைத் தலைவர் ராதாராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்குமார், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் மலர்கொடி, பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், நேசம் தொண்டு நிறுவனர் முருகன், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .






